சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி? முக்கிய செய்திகள்

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி?

🔄 Updated:
1 min read
💬 0

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி?

நாட்டின் பல பகுதிகளில் இன்று (28) வெப்பச் சுட்டெண் எச்சரிக்கை மட்டத்தை அடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பகல் நேரங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிப்புறங்களில் பணியாற்றுபவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், நிழலான இடங்களில் அடிக்கடி ஓய்வு எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடுமையான உடல் உழைப்பு மற்றும் வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும், வாகனங்களுக்குள் குழந்தைகளை தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகல் நேரங்களில் இலகுவான, வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.