வெல்லாவெளி பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கு ‘AI for Modern Office Productivity’ பயிற்சி
போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தெரிவுசெய்யப்பட்ட வெல்லாவெளி பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கான ‘AI for Modern Office Productivity’ எனும் தலைப்பிலான சிறப்பு பயிற்சிப் பட்டறை 29.09.2026 அன்று விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இப்பயிற்சிக்காக தெரிவுசெய்யப்பட்ட 29 உத்தியோகஸ்தர்களுக்கு நவீன அலுவலகப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயனுள்ள முறையில் பயன்படுத்தி பணிகளின் வேகம், துல்லியம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதன்போது, AI தொடர்பான அடிப்படை அறிவு, தொழில்முறை மின்னஞ்சல், கடிதங்கள் மற்றும் அறிக்கைகள் தயாரித்தல், PDF ஆவணங்களை சுருக்குதல் மற்றும் தரவுகளைப் பிரித்தெடுத்தல், Spreadsheet மற்றும் நிர்வாகப் பணிகளில் AI பயன்பாடு, இணையத் தேடல் மற்றும் விளக்கக்காட்சிகளை (Presentation) தயாரித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மேலும், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய தனியுரிமை மற்றும் பொறுப்பான பயன்பாடு தொடர்பான விடயங்களும் இப்பயிற்சியில் உள்ளடக்கப்பட்டன.
அன்றாட அலுவலகப் பணிகளை நவீன AI கருவிகளின் உதவியுடன் விரைவாகவும், துல்லியமாகவும், திறம்படவும் மேற்கொள்வதற்கான நடைமுறை வழிமுறைகள் தொடர்பிலும் செயன்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அலுவலகப் பணியாளர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதற்கும், AI தொழில்நுட்பத்தை அலுவலகப் பணிகளில் பொறுப்புடனும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்துவதற்கான அறிவை வழங்குவதற்கும் இப்பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.




