காரைதீவு சமுதாயக் கல்லூரியில் CareerFit & IT பயிலுனர்களுக்கான நேர்முகத் தேர்வு மற்றும் Life Skills அறிமுக அமர்வு முக்கிய செய்திகள்

காரைதீவு சமுதாயக் கல்லூரியில் CareerFit & IT பயிலுனர்களுக்கான நேர்முகத் தேர்வு மற்றும் Life Skills அறிமுக அமர்வு

🔄 Updated:
1 min read
💬 0

காரைதீவு சமுதாயக் கல்லூரியில் CareerFit & IT பயிலுனர்களுக்கான நேர்முகத் தேர்வு மற்றும் Life Skills அறிமுக அமர்வு

காரைதீவு சமுதாயக் கல்லூரியில் CareerFit & IT Course பயிலுனர்களுக்கான நேர்முகத் தேர்வு (Interview) மற்றும் Life Skills அறிமுக அமர்வு நடைபெற்றது.

இதன்போது, பயிலுனர்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட திறன்களை மேம்படுத்துவதுடன், எதிர்கால தொழில் வாய்ப்புகளை எதிர்கொள்ள தேவையான திறன்கள் தொடர்பிலும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பயிற்சி முகாமையாளர் திரு. சார்ல்ஸ் கிரேசியன், கல்லூரியின் திட்ட முகாமையாளர் திருமதி. ஹரிஹரன் கிந்துஜா மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்ட உத்தியோகத்தர் T. சங்கியா ஆகியோர் கலந்துகொண்டு நேர்முகத் தேர்வினை மேற்கொண்டனர்.

பின்தங்கிய மற்றும் வளம் குறைந்த சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களை மையமாகக் கொண்டு, தொழில்முறை அறிவு, நடைமுறை அனுபவம் மற்றும் வேலைவாய்ப்புத் திறன்களை மேம்படுத்தும் நோக்குடன் பல்வேறு NVQ பயிற்சி நெறிகள், திறன் மேம்பாட்டுப் பாடநெறிகள், மொழிப் பயிற்சிகள் மற்றும் தொழில் வழிகாட்டல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், தொழில்திறன் பயிற்சிகளுடன் இணைந்து வாழ்க்கைத்திறன் பயிற்சிகள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களையும் வழங்குவதன் மூலம், இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தை உறுதியான பாதையில் அமைத்துக்கொள்ளவும், தன்னம்பிக்கையுடன் சமூகத்தில் சாதனையாளர்களாக உருவெடுக்கவும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி தொடர்ச்சியான சேவைகளை வழங்கி வருகின்றது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்