மட்/கரடியனாறு இந்து வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா
மட்/கரடியனாறு இந்து வித்தியாலயத்தின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா 30.09.2026 அன்று பாடசாலையில் நடைபெற்றது.
இதன்போது, பாடசாலை சமூகத்தினால் கரடியனாறு மனிதநேயம் சமுதாயக் கல்லூரியிடம் மாணவர்களுக்கான பதக்கங்கள் கோரப்பட்ட நிலையில், குறித்த பதக்கங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
கரடியனாறு இந்து வித்தியாலயத்தின் அதிபர் ஆர். ரவாயலயசந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன், ஓய்வுநிலை ஆசிரியர் ஆலோசகர் திருமதி Markiretmalar Thevathasan மற்றும் கரடியனாறு மனிதநேயம் சமுதாயக் கல்லூரியின் பயிற்றுவிப்பாளர் Mrs. Thanushika Vinojan ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்கள் பாடசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.






மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.