Youth Leadership Training Programme
மனிதநேயம் சமுதாயக் கல்லூரியின் அனுசரணையுடன், இளைஞர்களின் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் Youth Leadership Training Programme திட்டத்தின் முதலாவது கட்டம் 20 பேருடன் முடிவடைந்துள்ளது.
Art of Living Foundation – Village of Hope அமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் அமைந்துள்ள Village of Hope வளாகத்தில் இப்பயிற்சி நடைபெற்றது.
இத்திட்டத்திற்காக 50 பேருக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது கட்டப் பயிற்சியை இம்மாத இறுதியில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
விவேகானந்தா அறக்கட்டளை, வாழும்கலை அமைப்பு மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி ஆகியன நிதி உதவி மற்றும் செயற்படுத்தல் பங்காளர்களாக இணைந்து செயற்படுகின்றன. இத்திட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படுகிறது.
18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்காக நடத்தப்படும் இவ்வதிவிடப் பயிற்சியில், சுயஅறிவு, தன்னம்பிக்கை, தொடர்பாடல், குழுவாகச் செயற்படுதல், திட்டமிடல், தீர்மானம் எடுத்தல், நேர முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவம் உள்ளிட்ட திறன்கள் மேம்படுத்தப்படுகின்றன. அத்துடன், சவால்களை எதிர்கொள்ளுதல், முரண்பாடுகளைக் கையாளுதல், யோகாசனம், மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் சிறப்புப் பயிற்சி பெற்ற வளவாளர்களால் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.




மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.