காரைதீவு விவேகானந்த சமுதாயக் கல்லூரியில் சரஸ்வதி பூஜை நிகழ்வு
காரைதீவு அன்னை ஸ்ரீ சாரதா கற்றல் மேம்பாட்டு நிலைய வளாகத்தில் இயங்கி வரும் விவேகானந்த சமுதாயக் கல்லூரியில் 19.09.2026 அன்று சரஸ்வதி பூஜை நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் தொழிற்பயிற்சி முகாமையாளர் சார்ல்ஸ் கிரேசியன், திட்ட முகாமையாளர் திருமதி ஹ. கிந்துஜா மற்றும் திட்ட உத்தியோகத்தர் T. சங்கியா ஆகியோர் புதுக்குடியிருப்பு கல்லூரியின் சார்பில் கலந்துகொண்டனர். மேலும், விவேகானந்த சமுதாயக் கல்லூரியின் பயிற்றுவிப்பாளர் பீதாம்பரம் பகவதன் மற்றும் பயிலுனர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.







பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த கல்வியை இடைநடுவே கைவிட்ட அல்லது கல்வியைத் தொடர முடியாத இளைஞர், யுவதிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தொழில் வழிகாட்டல் மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் விவேகானந்த சமுதாயக் கல்லூரி செயற்பட்டு வருகிறது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.