மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான VCOT இன் முயற்சி முக்கிய செய்திகள்

மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான VCOT இன் முயற்சி

1 min read
💬 0

மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான VCOT இன் முயற்சி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், மனிதநேயம் நிதியமும் (Manitha Neyam Trust), விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியும் (VCOT) இணைந்து க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 6,170 மாணவர்களுக்கு விசேட கல்வி உதவித் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இதன் கீழ், மாவட்டத்தின் நான்கு கல்வி வலயங்களைச் சேர்ந்த 151 பாடசாலைகளின் மாணவர்களுக்கு ஆறு முக்கிய பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 1,912 மாணவர்களுக்கும், பட்டிருப்பு கல்வி வலயத்தில் 1,472 மாணவர்களுக்கும், கல்குடா கல்வி வலயத்தில் 1,951 மாணவர்களுக்கும், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 835 மாணவர்களுக்கும் இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.

கல்வி வளர்ச்சிக்கான இத்தகைய செயற்பாடுகளில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி வருடாந்தம் ஈடுபட்டு வருவதுடன், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில், மனிதநேயம் நிதியத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி மேம்பாட்டிற்கான முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1671 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.