லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எவ்விதத் திருத்தமும் இடம்பெறாது என அந்நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு 3,680 ரூபாவிற்கும், 5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு 1,477 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை இறுதியான கடந்த ஜூன் மாதம் திருத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.