சர்வதேச கிரிக்கட்டில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள முக்கிய ஆட்டங்கள் Uncategorized

சர்வதேச கிரிக்கட்டில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள முக்கிய ஆட்டங்கள்

1 min read
💬 0

பங்களாதேஷ் ஆடவர் அணிக்கும் இந்திய கிரிக்கட் அணிக்கும் இடையிலான இரண்டாவது 20க்கு20 ஆட்டம் இன்றைய தினம், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஆட்டம் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளைய ஆட்டம் பங்களாதேஷுக்கு முக்கிய ஆட்டமாக கருதப்படுகிறது.

இதில் பங்களாதேஷ் தோற்றால், 20க்கு20 தொடர் வெற்றியை அந்த அணி இழக்கவேண்டியிருக்கும். எனவே இன்ற பங்களாதேஷ் அணியின் திறமைக்கு சவாலான ஆட்டத்தை காணக்கூடியதாக இருக்கும்.
இதேவேளை ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மகளிருக்கான சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் 20க்கு20 உலகக் கிண்ணப்போட்டிகளில் இன்றைய தினம், இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஆட்டம் நடைபெறவுள்ளது.

இதுவரை இலங்கை அணி தாம் பங்கேற்ற இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.