இலங்கையில் சில பாடசாலைகளுக்கு விடுமுறை

1 min read
💬 0

சீரற்ற காலநிலை காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு நாளையதினம்(14) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ள மேல் மாகாணத்தில் உள்ள குறித்த பாடசாலைகளை மூடுவதற்கு மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார்.

இதன்படி, களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க, பியக ஆரம்ப, யபரலுவ ஆனந்த வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக இவ்வாறு விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.