சீனிக்கான பண்ட வரி தொடர்பான அறிவிப்பு

சீனிக்கான பண்ட வரி தொடர்பான அறிவிப்பு

அரசாங்கம் இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான கிலோவொன்றுக்கு 50 ரூபாய் விசேட பண்ட வரியை நீடித்துள்ளது.

இதன்படி, இந்த வரி டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் வருடத்திற்கு விதிக்கப்பட்ட இந்த விசேட பண்ட வரி, இம்மாதம் 1 ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில், இப்போது மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவிப்பை நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.