வானிலை அறிக்கை வெளியானது: மழை பெய்யும் சாத்தியம் Uncategorized

வானிலை அறிக்கை வெளியானது: மழை பெய்யும் சாத்தியம்

1 min read
💬 0

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.
வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுமெனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (07) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.