உலக சுற்றுலாப் பயணிகளிடையே விரும்பத்தக்க நாடான இலங்கை Uncategorized

உலக சுற்றுலாப் பயணிகளிடையே விரும்பத்தக்க நாடான இலங்கை

1 min read
💬 0

2024 ஆம் ஆண்டில் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கைக்கு (Srilanka) பிரித்தானியாவின் லண்டன் (London) நகரில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் தங்க விருது வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தை தாய்வானும், மூன்றாவது இடத்தை போர்ட்டோ ரிகோவும் பெற்றுள்ளது.
முன்னதாக இலங்கை 8வது இடத்தில் இருந்தது.
இலங்கையை Most Desirable Island பெயரிடுவதற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்திய பெருங்கடலின் முத்து என்ற வகையில், சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான தீவுகளில் ஒன்றாக இலங்கை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள புராதன இடங்கள் குறிப்பாக சிகிரியா, தம்புள்ள குகைகள், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை புராதன இடிபாடுகள் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.