வளிமண்டலவியல் திணைக்களம் வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களம் வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

1 min read
💬 0

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தும் ஏற்படலாம்.
எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு வேண்டப்படுகின்றனர்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.