மேலதிக வகுப்பு

G.C.E O/L – மேலதிக வகுப்புகளுக்கு தடை!

2024 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காக கொண்ட அனைத்து கற்றல் செயற்பாடுகளும் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளன.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சி பட்டறை என்பவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சை எதிர்வரும் 17 ஆரம்பமாகவுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு: https://maatramnews.com


G.C.E. O/L – Ban on Additional Classes!

All learning activities aimed at the 2024 G.C.E. Ordinary Level Examination will be banned from midnight on the 11th of this month.

The Commissioner General of Examinations has announced this decision.

Accordingly, special classes, seminars, workshops, and training sessions for students appearing for the 2024 G.C.E. Ordinary Level Examination will be prohibited.

The G.C.E. Ordinary Level Examination is scheduled to commence on the 17th of this month.

For more details: https://maatramnews.com