மட்டக்களப்பு கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக, மதிப்பிற்குரிய தினகரன் ரவி அவர்கள் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதன்மைநிலை தரத்தைச் சேர்ந்த அதிகாரியான இவர் திருகோணமலை கல்வி வலயப் பணிப்பாளராக கடமையாற்றி தற்போது மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கு முன்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தின் பணிப்பாளராக இருந்து சிறந்த சேவையினை ஆற்றியிருந்தார்.



அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர்களிற்கு வேலை அனுபவம் மற்றும் தொழில்முயற்சியாளர்களின் முன்னேற்றம் போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு நிதி நிருவாக மேலாண்மை மற்றும் கணினி தொழில்நுட்ப சேவைகள் போன்ற பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வரும் அமிர்தா நிறுவனமானது மதிப்பிற்குரிய தினகரன் ரவி அவரை பாராட்டி, 16.06.2025 இன்று பொன்னாடை போர்த்தி கௌரவித்தது.
இதன் போது மாணவர்களின் கல்வி மேன்பாடு மற்றும் மாணவர்களுக்கு தேவையான பயிற்சி பட்டறைகள் பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற்றது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Amirda’s Felicitation for the New Zonal Education Director Mr. Thinakaran Ravi
Mr. Thinakaran Ravi, a respected senior officer in the Sri Lanka Education Administrative Service, recently officially assumed duties as the new Zonal Education Director of the Batticaloa Education Zone.
He previously served as the Zonal Director of Education in the Trincomalee Zone and has now taken up the responsibilities in Batticaloa. Before that, he rendered excellent service as the Zonal Director of the Kalkudah Education Zone in the Batticaloa district.
In this context, Amirda — an organization committed to providing services such as financial management and information technology to support youth employment and the growth of entrepreneurs in the Batticaloa district — felicitated Mr. Dhinakaran Ravi on 16.06.2025 by presenting him with a shawl of honor.
During the event, a meaningful discussion was held on enhancing student education and organizing essential training workshops for students.
For more news Maatram News