அன்னை ஸ்ரீ சாரதா நிலைய மாணவர்களுக்கான புத்தகப்பைகள் வழங்கி வைப்பு

அன்னை ஸ்ரீ சாரதா நிலைய மாணவர்களுக்கான புத்தகப்பைகள் வழங்கி வைப்பு

அன்னை ஸ்ரீ சாரதா நிலைய மாணவர்களுக்கான புத்தகப்பைகள் வழங்கி வைப்பு

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் 2020 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையமானது ஸ்தாபிக்கப்பட்டு தற்போது மாணவிகளை வலுவூட்டும் பாரியளவான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

குறித்த செயற்பாட்டின் ஒரு அங்கமாக புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் 60 மாணவிகளுக்கு விசேட உணவு, ஆடைகள், பிரத்தியேக வகுப்புகள் போன்றவற்றை இலவசமாக சாரதா நிலையம் வழங்கி வருகின்றது.

இதேவேளை Lyka Gnanam Foundation அமைப்பினரால் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் மாணவிகளுக்கான புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க அதிபரும் Lyka Foundation உதவித் தலைவருமாகிய திரு.அருமைநாயகம் அவர்கள், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.உமாமகேஸ்வரன் அவர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.விஜயகுமார் அவர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.சுஜந்தன் அவர்கள் உள்ளிட்ட சாரதா நிலையத்தின் தலைவர், சேவையாளர்கள் மற்றும் மாணவிகளும் கலந்து சிறப்பித்தனர்.

மேலதிக செய்திகளுக்கு மாற்றம் செய்திகள்

Distribution of book bags to students of Annai Sri Sarada Institute

The Annai Sri Saradha Centre, located in the Pudukkudiyurup area of Mullaitivu, was established by the Vivekananda Community Foundation in 2020 and is currently implementing large-scale activities to empower female students.

As part of the said activity, the Saradha Centre is providing free food, clothes, special classes, etc. to 60 female students with the support of diaspora relations.

Meanwhile, an event was held by the Lyka Gnanam Foundation to distribute book bags to the female students of the Annai Sri Saradha Centre.

The event was graced by the presence of Mr. Arumainayakam, the Government Agent of Kilinochchi District and Assistant Chairman of Lyka Foundation, Mr. Umamageswaran, the Government Agent of Mullaitivu District, Mr. Vijayakumar, the Divisional Secretary of Pudukudiyiruppu, Mr. Sujanthan, the Assistant Director of Planning, as well as the Chairman, staff and students of the Saratha Centre.