50 ஆண்டுகளுக்கு பின் மகளை கண்டுபிடித்த தந்தை 
50 ஆண்டுகளுக்கு பின் மகளை கண்டுபிடித்த தந்தை 

50 ஆண்டுகளுக்கு பின் மகளை கண்டுபிடித்த தந்தை 

50 ஆண்டுகளுக்கு பின் மகளை கண்டுபிடித்த தந்தை 

இங்கிலாந்தின் வில்ட்ஷயர் (Wiltshire) நகரைச் சேர்ந்தவர் கெவின் ஜோர்டான். இவர் தனது பள்ளிப் பருவத்தில் ஜாக்கி என்பவரைக் காதலித்து வந்தார்.

அப்போது அவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

ஆனால் பள்ளிப் பருவம் என்பதால் அவர்களது பெற்றோர் இதனை அவமானமாகக் கருதினர். எனவே அவர்களது அறிவுறுத்தலின் பேரில் அந்தக் குழந்தையைத் தத்து கொடுத்தனர்.

ஆனால் அவர்கள் வளர்ந்த பிறகு இருவரும் திருமணம் செய்து அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன.

இதற்கிடையே, கடந்த 2013 ஆம் ஆண்டு ஜாக்கி இறந்தார்.

அதன்பிறகு சிறு வயதில் தத்து கொடுத்த தனது மகளைக் கண்டுபிடிக்க கெவின் முடிவு செய்தார்.

இதற்காகத் தனியார் தொலைக்காட்சி உதவியை நாடினார்.

இந்நிலையில், அவரது மகள் ஹிலாரி என்ற பெயரில் சாலிஸ்பரி அருகே வசிப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, பிரிந்திருந்த தந்தையும், மகளும் நேரில் சந்தித்தனர்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்த சந்திப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Father Finds His Daughter After 50 Years

Kevin Jordan, a resident of Wiltshire, England, once fell in love with a woman named Jackie during his school days.

At that time, the couple had a beautiful baby girl.

However, since they were still in school, their parents considered it a disgrace and, following their advice, the baby was given up for adoption.

As the years passed, Kevin and Jackie grew up, married other partners, and had children of their own.

In 2013, Jackie passed away.

After her death, Kevin decided to search for the daughter they had given up when they were young.

He sought help from a private television channel to locate her.

Eventually, it was discovered that his daughter, named Hilary, was living near Salisbury.

Following this revelation, the father and daughter finally met in person.

Their reunion after 50 years has moved many to tears.