பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை நீக்கும் வவுனியாபொலிஸார்! Uncategorized

பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை நீக்கும் வவுனியாபொலிஸார்!

1 min read
💬 0

வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் நீக்கும் பணிகளை வவுனியா பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி பிரச்சாரத்திற்கான நாள் புதன்கிழமை (18) ஆகும் .
இன்றிலிருந்து தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான பதாதைகள், சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவது தேர்தல் சட்ட விதிமுறை மீறல் என இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட பொலிஸார் குறித்த பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.