ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த அனுபவங்களுக்குப் பெயர் (A cup of coffee costs this many lakhs? ) பெற்ற டுபாய் நகரில், ஒரு கஃபேவில் உலகின் மிகவும் விலையுயர்ந்த காபி ஒரு கோப்பை $980 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு கோப்பை காபியின் விலை ரூ. 2,98,508 ஆகும். டுபாய் நகரில் உள்ள ஜூலித் (Julith) கஃபேவில் இந்த காபி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பனாமாவைச் சேர்ந்த, மிக உயர்ந்த விலையில் ஏலத்தில் வாங்கப்பட்ட “Nido 7 Geisha” வகை காபி கொட்டைகளிலிருந்தே இந்த காபி தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் டுபாய் நகரிலுள்ள ‘ரோஸ்டர்ஸ்’ (Roasters) எனும் கஃபே, ஒரு கோப்பை காபியை 2,500 திர்ஹம்ஸ் விலையில் விற்று கின்னஸ் உலக சாதனை படைத்தது.
தற்போது ஜூலித் கஃபே அந்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
இந்த காபியை தயாரித்து வழங்கும் ஜூலித் கஃபேயின் இணை நிறுவனர் செர்கான் சக்ஸோஸ்,
“இந்த காபி தேநீரைப் போல மலர் மற்றும் பழங்களின் நறுமணத்துடன் காணப்படும். இதில் மல்லிகை போன்ற வெள்ளை மலர்களின் வாசனையும், ஆரஞ்சு மற்றும் பெர்கமோட் போன்ற பழங்களின் சுவைகளும், சிறிதளவு ஆப்ரிகாட் மற்றும் பீச் சுவையும் காணப்படும். இது தேன் போல மென்மையாகவும் இனிமையாகவும் இருக்கும்,” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது —
பனாமாவில் நடைபெற்ற ஏலத்தில் இந்த காபி கொட்டைகளை வாங்க ஜூலித் கஃபே கடுமையான போட்டியை சந்தித்தது. சுமார் 20 கிலோ கிராம் காபி கொட்டைகள் 2.2 மில்லியன் திர்ஹம்ஸ் (சுமார் $600,000 அமெரிக்க டொலர்) விலையில் வாங்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
காபி கொட்டைகளுக்கு இதுவரை வழங்கப்பட்டதிலேயே இதுவே அதிகபட்ச விலை என அதன் இணை நிறுவனர் கூறியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
A cup of coffee costs this many lakhs?
In Dubai — a city known for its luxury and extravagant experiences — a café has reportedly sold the world’s most expensive cup of coffee for $980 USD.
In Sri Lankan currency, the price of one cup amounts to Rs. 298,508. This exclusive coffee is being served at Julith Café in Dubai.
The coffee is said to be made from “Nido 7 Geisha” beans, a rare and highly prized variety purchased at a premium auction in Panama.
Last month, Dubai’s Roasters Café set a Guinness World Record by selling a cup of coffee for 2,500 dirhams.
Now, Julith Café has broken that record and established a new world record.
According to Serkan Saksoz, the co-founder of Julith Café,
“This coffee has floral and fruity aromas similar to tea. It carries the scent of white jasmine flowers, flavors of orange and bergamot, along with hints of apricot and peach. It’s smooth and sweet, like honey.”
He further stated that Julith Café faced fierce competition to purchase these rare coffee beans at the auction in Panama. Approximately 20 kilograms of coffee beans were bought for 2.2 million dirhams (around $600,000 USD).
This marks the highest price ever paid for coffee beans, according to the café’s co-founder.

