வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தின் மீது விதிக்கப்படவுள்ள Should You Go to the UK for Higher Studies? புதிய வரி தொடர்பில் பிரித்தானியாவின் முன்னணி பல்கலைக்கழகம் ஒன்றின் துணைவேந்தர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இது தவறான கொள்கை எனவும் கல்வித் துறையைப் பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரித்தானியாவின் நீண்டகால நலன்களுக்கு உகந்தது அல்ல என்றும் துணைவேந்தர் விமர்சித்துள்ளார்.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் நிர்வாகத் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலையில், சர்வதேச மாணவர்களுக்கான உலகளாவிய இலக்காகப் பிரித்தானியா மாறுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு என அவர் சுட்டிக்காட்டினார்.
6 சதவீத வரி விதிக்கப்பட்டால், இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஆண்டுக்கு 600 மில்லியன் யூரோவுக்கும் அதிகமாக செலவாகும் என்றும், மான்செஸ்டர் பல்கலைக்கழகம் போன்ற முன்னணி நிறுவனங்கள் இதனால் குறிப்பாகப் பாதிக்கப்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செலவை ஈடுசெய்ய, இருக்கும் நிதியைக் கொண்டே சமாளிக்க வேண்டியிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
பல பல்கலைக்கழகங்கள் நிதிச் சிக்கலில் தத்தளிக்கும் இந்த நேரத்தில், இது மிகவும் கடினமான சூழலை உருவாக்கும் என்று அவர் எச்சரித்தார்.
இந்த வரியின் மூலம் கிடைக்கும் வருமானம், ஏழை மாணவர்களுக்கான பராமரிப்பு மானியங்களை மீண்டும் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
பிரித்தானியாவின் உயர்கல்வித் துறை கடுமையான நிதிச் சிக்கல்களை எதிர்கொள்கிறது.
பணவீக்கம் காரணமாக உள்நாட்டு மாணவர்களின் கல்விக் கட்டண வருமானம் குறைந்ததால் ஏற்பட்ட பற்றாக்குறையைச் சமாளிக்க, பல்கலைக்கழகங்கள் அதிக கட்டணம் செலுத்தும் சர்வதேச மாணவர்களை நம்பி இருந்தன.
ஆனால், அண்மைய குடியேற்ற மற்றும் விசா மாற்றங்கள் காரணமாக 2023 ஆம் ஆண்டு முதல், வெளிநாட்டு மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Should You Go to the UK for Higher Studies?
The Vice-Chancellor of a leading university in the United Kingdom has expressed dissatisfaction regarding the new tax proposed on international students’ tuition fees.
He stated that this is a wrong policy and would negatively affect the education sector.
He also criticized that it is not beneficial for the long-term interests of the UK.
Pointing out that American universities are facing administrative challenges, he noted that this could be a great opportunity for the UK to become a global destination for international students.
Researchers have indicated that if a 6% tax is imposed, universities in England will incur additional costs exceeding 600 million euros annually, with top institutions such as the University of Manchester being particularly affected.
He added that this extra cost would have to be managed using existing funds.
At a time when many universities are already struggling with financial difficulties, this new tax could create an even more challenging situation, he warned.
The government, however, has stated that the revenue generated from this tax will be used to restore maintenance grants for low-income students.
The UK’s higher education sector is currently facing severe financial challenges.
Due to inflation, the income from domestic students’ tuition fees has decreased, creating a funding gap that universities have been compensating for by relying on higher-paying international students.
However, because of recent immigration and visa policy changes, international student enrollment has declined since 2023.

