Price Controls Introduced for 350 Medicines
Price Controls Introduced for 350 Medicines

350 மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை

அத்தியாவசிய சிகிச்சைகளை மக்களுக்கு மேலும் மலிவு Price Controls Introduced for 350 Medicines விலையில் கிடைக்கச் செய்யும் நோக்குடன், 350 வகையான மருந்துகளுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டார்.

ஒழுங்குபடுத்தப்பட்ட விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்வதன் மூலம் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும், இதன்மூலம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உட்படப் பல முக்கியமான மருந்துகளின் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உதாரணமாக, புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் Paclitaxel மருந்தின் ஒரு குப்பியின் விலை 42,000 ரூபாவிலிருந்து 26,332 ரூபாய் 29 சதமாகவும் குடற் புழுத் தொற்றுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் Mebendazole 500 mg மாத்திரையின் விலை 83 ரூபாவிலிருந்து 50 ரூபாய் 25 சதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை நிர்ணயப் பொறிமுறை தொடரும் என்றும், புதிதாகப் பதிவுசெய்யப்படும் மருந்துகளுக்கும், உரிமம் புதுப்பிக்கப்படும் மருந்துகளுக்கும் புதிய கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், நுகர்வோர் மருந்துகள் மற்றும் அவற்றின் விலையை எளிதாக அறிந்துகொள்ள ஒரு கைபேசி செயலியை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், மருந்தகங்கள் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் மருந்துகளை விற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

பொதுமக்கள் தாம் வாங்கும் மருந்துகளின் விலையைச் சரிபார்க்க உரிமை உண்டு, மேலும் மருந்தகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டணங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Price Controls Introduced for 350 Medicines

To make essential treatments more affordable for the public, price controls have reportedly been announced for 350 types of medicines.

Dr. Ananda Wijewickrama, Chairman of the National Medicines Regulatory Authority, stated this while speaking to the media today.

The objective of this initiative is to improve public health by ensuring that medicines are available at regulated prices. As a result, the prices of several important medicines — including those used for treating high blood pressure and cancer — will be significantly reduced, he said.

For example, the price of a vial of Paclitaxel, a drug used in cancer treatment, has been reduced from 42,000 rupees to 26,332.29 rupees. Similarly, the price of Mebendazole 500 mg, used to treat intestinal worm infections, has been reduced from 83 rupees to 50.25 rupees.

He further noted that this pricing mechanism will continue, and new controlled prices will be applied to newly registered medicines as well as those undergoing license renewal.

Additionally, plans are underway to introduce a mobile application that will allow consumers to easily check medicines and their prices. He also warned that legal action will be taken against pharmacies that sell medicines above the maximum retail price.

He emphasized that the public has the right to verify the prices of the medicines they purchase, and pharmacies must strictly comply with the regulated charges.