Toilet Sold for 375 Crore at Auction
Toilet Sold for 375 Crore at Auction

375 கோடி ரூபாய்க்கு ஏலம் போன கழிப்பறை

இத்தாலிய கலைஞரான மௌரிசியோ Toilet Sold for 375 Crore at Auction கட்டேலன் உருவாக்கிய, 18 கரட் தங்கத்தாலான, முழுமையாகச் செயல்படும் கழிப்பறைச் சிற்பம் ஒன்று, ஏலத்தில் 12.1 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சிற்பம் “அமெரிக்கா” என்ற தலைப்பைக் கொண்டுள்ளது.

இது 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுடன் சுமார் 101 கிலோகிராம் எடை கொண்டது.

ஏலத்திற்கு முன்னர், வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட முறையில் பார்வையிட ஏதுவாக, இது ப்ரூயர் கட்டடத்தில் உள்ள சோதேபி தலைமையகத்தின் கழிப்பறையில் நிறுவப்பட்டிருந்தது.

கட்டேலனால் உருவாக்கப்பட்ட மூன்று தங்கக் கழிப்பறைச் சிற்பங்களில், இதுவும் ஒன்றாகும்.

இதன் ஒரு பிரதி, முதலில் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு, 100,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அதைப் பயன்படுத்த வரிசையில் நின்றனர்.

மற்றொரு பிரதி, 2019 ஆம் ஆண்டில் பிளென்ஹெய்ம் அரண்மனையில் இருந்து திருடப்பட்டது.

சோதேபியின் கூற்றுப்படி, தற்போது ஏலம் போன இந்தச் சிற்பமே எஞ்சியிருக்கும் ஒரே பிரதி ஆகும்.

இந்தச் சிற்பம் அதன் தங்கத்தின் விலைக்குச் சமமான தொகையான 10 மில்லியன் டொலரில் ஏலத்தைத் தொடங்கியது.

சோதேபியின் சமகால கலை ஏலப் பிரிவின் தலைவர் லூசியஸ் எலியட், இந்த தங்கக் கழிப்பறை பார்வையாளர்களை நோக்கி நீட்டப்பட்ட ஒரு கண்ணாடி போன்றது என்று கூறினார்.

சர்ச்சைக்குரிய கலைஞர் கட்டேலன் உலகின் மிகவும் புகழ்பெற்ற கருத்துரு சார்ந்த கலைஞர்களில் ஒருவர் கட்டேலனின் மிகப் பெரிய மற்றும் சர்ச்சைக்குரிய படைப்பு “நகைச்சுவையாளர்” என்பதாகும்.

இது சுவரில் டேப் ஒட்டப்பட்ட ஒரு வாழைப்பழத்தைக் கொண்டதாகும்.

இந்த “நகைச்சுவையாளர்” படைப்பு, 2024 ஆம் ஆண்டில் சோதேபியில் 6.24 மில்லியன் டொலர் விலைக்கு ஏலம் போனது.

இந்த தங்கக் கழிப்பறையின் விற்பனை, கலை உலகில் அதன் பொருள் மதிப்பு மற்றும் கருத்து மதிப்பு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.

இந்த தங்கக் கழிப்பறையின் புதிய உரிமையாளர், அமெரிக்காவின் ஒரு பிரபலமான பொழுதுபோக்கு நிறுவனமான ரிப்ளீஸ் பிலீவ் இட் ஆர் நாட் என்பதாகும்.

அவர்கள் இந்தச் சிற்பத்தை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Toilet Sold for 375 Crore at Auction

A fully functional toilet sculpture made of 18-carat gold, created by Italian artist Maurizio Cattelan, has been sold at an auction for 12.1 million USD, according to international media reports.

The sculpture is titled “America.”

It was created in 2016 and weighs approximately 101 kilograms.

Before the auction, it was installed in the restroom of Sotheby’s headquarters at the Breuer building, allowing potential buyers to view it privately.

This is one of the three gold toilet sculptures created by Cattelan.

One replica was first displayed at the Guggenheim Museum, where over 100,000 visitors stood in line to use it.

Another replica was stolen from Blenheim Palace in 2019.

According to Sotheby’s, the sculpture sold at this auction is the only remaining replica.

The sculpture started at an auction price equal to its gold value — 10 million USD.

Lucius Elliott, head of Sotheby’s Contemporary Art auction division, described the toilet as “a mirror extended toward its viewers.”

Controversial artist Cattelan is considered one of the world’s most famous conceptual artists. One of his biggest and most controversial works is “The Comedian.”

It features a banana duct-taped to a wall.

This artwork, “The Comedian,” was auctioned at Sotheby’s in 2024 for 6.24 million USD.

The sale of this golden toilet has once again sparked discussion in the art world about the value of artworks—both their material worth and conceptual meaning.

The new owner of the golden toilet is the famous American entertainment company Ripley’s Believe It or Not.

They plan to put the sculpture on public display.