Does Having Children Reduce Women’s Lifespan?
Does Having Children Reduce Women’s Lifespan?

குழந்தை பெற்றுக் கொள்வதால் பெண்களின் ஆயுள் குறைகிறதா?

குழந்தை பெற்றுக் கொள்வதால் பெண்களின் ஆயுள் குறைவதாகத் Does Having Children Reduce Women’s Lifespan? தெரிவிக்கப்படுகிறது.

சில பெண்கள் தாங்கள் ஒவ்வொரு குழந்தையைப் பெற்றெடுத்தபோதும், தங்கள் மொத்த ஆயுளில் ஆறு மாதங்களை இழந்ததாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிப்பதாக சர்வதேச செய்தி நிறுவனமான பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

கடினமான சூழ்நிலையில் வாழும் பெண்கள் ஆயுள் காலத்தை இழப்பதாக புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

வரலாற்றுப் பதிவுகளில் மேற்கொண்ட ஆய்வின்படி, சில தாய்மார்களின் ஆயுள், அவர்கள் பெற்ற ஒவ்வொரு குழந்தைக்கும் ஆறு மாதங்கள்வரை குறைந்திருக்கலாம்.

மிகவும் கடினமான சூழலில் வாழ்ந்த பெண்கள் இந்த இணைப்பின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் காலகட்டத்தில், அவர்கள் வாழ்ந்த சூழலின் தன்மை இதில் ஒரு முக்கியக் காரணியாக இருந்ததை இந்த ஆய்வு காட்டுகிறது.

அதிக பஞ்சம், அதிக குழந்தைகளைப் பெறுவது ஆகிய காரணங்களால் ஆயுள் குறைவது போன்ற தாக்கத்தை, உலகின் சில பகுதிகளில் உள்ள பெண்கள் தற்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கலாம் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Does Having Children Reduce Women’s Lifespan?

It is reported that women’s lifespan may decrease due to childbirth.

According to an article published by the international news organisation BBC, historical records indicate that some women may have lost six months of their total lifespan for every child they gave birth to.

A new study shows that women living in harsh conditions tend to lose more years of life.

Based on an analysis of historical records, the study suggests that the lifespan of some mothers may have reduced by up to six months for each child they bore.

It appears that women who lived in extremely difficult circumstances were more severely affected by this association.

The study also shows that the nature of the environment in which women lived during their childbearing years played a significant role.

The findings reveal that factors such as severe poverty and having many children may still be contributing to reduced lifespan among women in some parts of the world today.