How to Practice Natural Farming Successfully in Sri Lanka? : Series 14 பயிர்களில் ஏற்படும் போசணைக் குறைபாடுகளை கண்டறிந்து அதற்குரிய தீர்வினை வழங்குதல் மிகவும் அவசியமானது.
இலைகளின் நிறம் மாறுதல், கருகுதல் அல்லது உலர்தல் போன்றவையானது, சில குறிப்பிட்ட சத்துக்கள் குறைவாக உள்ளன என்பதற்கான அறிகுறிகளாகும்.
நைதரசன் குறைபாடு – படம் 1
🌱
முழு இலையும் வெளிறிய பச்சை அல்லது மஞ்சள் நிறமாக மாறும். இலை நுனியில் இருந்து ‘V’ வடிவில் பழுப்பு நிறமாக காய்ந்து வரும்.
பொஸ்பரஸ் குறைபாடு – படம் 2
🌱
முதிர்ந்த இலைகள் ஊதா அல்லது கருஞ்சிவப்பு நிறமாக மாறும். வளர்ச்சி குன்றி காணப்படும்.
பொட்டாசியம் குறைபாடு – படம் 3
🌱
முதிர்ந்த இலையின் விளிம்புகள் மஞ்சள் அல்லது எரிந்தது போன்ற பழுப்பு நிறமாக மாறும்.
மக்னீசியம் குறைபாடு – படம் 4
🌱
முதிர்ந்த இலையின் நரம்புகள் பச்சையாக இருக்கும், ஆனால் நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதி மஞ்சள் நிறமாக மாறும்.
இரும்பு சத்து குறைபாடு – படம் 5
🌱
இளம் இலைகளின் நரம்புகள் பச்சையாக இருக்க, இடைப்பட்ட பகுதிகள் வெளுத்து (வெள்ளை/மஞ்சள்) காணப்படும்.
கல்சியம் குறைபாடு – படம் 6
🌱
இளம் இலைகள் சுருண்டு, முறுக்கிக் கொண்டு காணப்படும். நுனிகள் கருகலாம்.
போரோன் சத்து குறைபாடு – படம் 7
🌱
இளம் இலைகளின் நுனிகள் வெளுத்து, பின் கருகிவிடும். இலைகள் தடித்து, உடையக்கூடிய தன்மையுடன் காணப்படும்.
காய்கள் மற்றும் பழங்கள் வெடிக்கும்., பூக்கள் உதிர்ந்து காய் பிடிப்பது குறையும்.
இயற்கை முறையில் இவற்றை நிவர்த்தி செய்ய கொம்போஸ் உரம் அல்லது மண்புழு உரம் அல்லது காய்ந்த எரு போன்றவைகளையும் இட்டு அந்தந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யத் தேவையான நைதரசன் பதிக்கும் அசற்றோபக்டர் மற்றும் அசோஸ்பைரில்லம் மற்றும் பொட்டாசியம் கரைக்கும் பொட்டாஷ் பக்டீறியா, பொஸ்பரஸ் கரைக்கும் பொஸ்போ பக்டீறியா போன்ற நுண்ணுயிரிகளை கொடுத்தல் வேண்டும்.
மேலும் போரோன் குறைபாட்டுக்கு எருக்கிலை கரைசல், இரும்பு, கல்சியம், மக்னீசியம் குறைபாடுக்கு நுண்சத்து கரைசல்களையும் கொடுத்து வருதலானது வினைத்திறனுள்ள இயற்கை முறை பயிர் செய்கைக்கு வழிவகுக்கும்.
CSJ Agri
23/01/2026
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
How to Practice Natural Farming Successfully in Sri Lanka? : Series 14
Identifying nutrient deficiencies in crops and providing appropriate solutions is very important.
Changes in leaf color, scorching, or drying are signs that certain essential nutrients are lacking.
Nitrogen Deficiency – Image 1 🌱
The entire leaf turns pale green or yellow. Dry brown patches appear in a ‘V’ shape starting from the leaf tip.
Phosphorus Deficiency – Image 2 🌱
Mature leaves turn purple or dark reddish in color. Overall plant growth becomes stunted.
Potassium Deficiency – Image 3 🌱
The edges of mature leaves turn yellow or develop a burnt-like brown color.
Magnesium Deficiency – Image 4 🌱
The veins of mature leaves remain green, while the areas between the veins turn yellow.
Iron Deficiency – Image 5 🌱
In young leaves, the veins remain green, while the areas between them become pale (white/yellow).
Calcium Deficiency – Image 6 🌱
Young leaves appear curled and twisted. Leaf tips may get scorched.
Boron Deficiency – Image 7 🌱
The tips of young leaves turn pale and later become scorched. Leaves become thick and brittle.
Fruits crack, flowers drop, and fruit setting is reduced.
To naturally overcome these deficiencies, compost, vermicompost, or well-decomposed farmyard manure should be applied. Along with this, beneficial microorganisms such as Azotobacter and Azospirillum for nitrogen fixation, potash-solubilizing bacteria for potassium, and phosphate-solubilizing bacteria for phosphorus should be used as required.
Additionally, for boron deficiency, Calotropis (Erukku) leaf extract can be applied, and for iron, calcium, and magnesium deficiencies, micronutrient solutions can be used. These practices support an efficient and productive natural farming system.
CSJ Agri
23/01/2026

