(Introduction Programme for ICT Technician NVQ Level 3 (Part-Time) and Computer Graphic Designer NVQ Level 4 Courses) பின்தங்கிய மற்றும் வளம் குறைந்த சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களை மையமாகக் கொண்டு, தொழில்முறை அறிவு, நடைமுறை அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்குடன் பல்வேறு NVQ பயிற்சி நெறிகள், திறன் மேம்பாட்டு பாடநெறிகள், மொழிப் பயிற்சிகள் மற்றும் தொழில் வழிகாட்டல் செயற்பாடுகள் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 12 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 2026ம் ஆண்டிற்கான ICT Technician NVQ Level 3 பகுதி நேரம், Computer Graphic Designer NVQ Level 4 பாடநெறியின் ஆரம்பகட்ட அறிமுக நிகழ்வானது 31.01.2025 சனிக்கிழமை அன்று மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி பற்றிய அறிமுகம், கல்லூரியின் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவூட்டப்பட்டதோடு ICT Technician, Computer Graphic Designing தொடர்பிலான வேலைவாய்ப்புகள் மற்றும் பாடநெறியின் முக்கியத்துவம் மற்றும் அதற்கான தொழில்வாய்ப்புகள் பற்றியும் தெளிவூட்டப்பட்டது.



மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Introduction Programme for ICT Technician NVQ Level 3 (Part-Time) and Computer Graphic Designer NVQ Level 4 Courses
With a focus on youth from underprivileged and resource-limited communities, the Vivekananda College of Technology has been conducting various NVQ training programmes, skill development courses, language training programmes, and career guidance activities in the Batticaloa District for the past 12 years, with the aim of enhancing professional knowledge, practical experience, and employability skills.
Accordingly, the introductory programme for the 2026 ICT Technician NVQ Level 3 (Part-Time) and Computer Graphic Designer NVQ Level 4 courses was held on Saturday, 31.01.2025, at the Vivekananda College of Technology located in Puthukudiyiruppu, Batticaloa.
During the event, an introduction to the Vivekananda College of Technology and its activities was provided. In addition, information was shared on employment opportunities related to ICT Technician and Computer Graphic Designing, the importance of the courses, and the career opportunities available upon completion of these programmes.

