Eco-friendly Control of Brown Planthopper and Fruit Fly வட மாகாணத்தில் நஞ்சற்ற முறையில் கிட்டத்தட்ட 150 ஏக்கரளவு பரப்பளவில் சிறுதானியம் மற்றும் நெல் உற்பத்தி செய்யும் இளம் பொறியியலாளர்களால் நிறுவப்பட்ட, இயற்கை விவசாய அமைப்பொன்றின் அண்மைய சந்திப்பொன்றில்,
‘கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தமது நெல் வயல்களில் ஏற்பட்ட கபிலத்தத்தி (அறக்கொட்டி) தாக்கமானது, கொழும்பில் உள்ள ஓர் ஆராய்ச்சி ஆய்வுகூடத்தில் இருந்து பெறப்பட்ட பேவேரியா பேசியானா எனப்படும் ஓர் நுண்ணுயிர் உரம் மூலம் 100% நஞ்சற்ற முறையில் 3 பிரயோகங்களில் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டது’ எனக் கூறியுள்ளனர்.
பெவேரியா பேசியானா எனப்படும் வெண்நிறப் பூஞ்சணம், ஓர் நஞ்சற்ற உயிரி பூச்சிக் கொல்லியாக, விவசாயத்தில் முன்னேற்றமடைந்த பல நாடுகளில் (இலங்கை தவிர) அங்கீகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.
இவற்றால் கட்டுப்படுத்தும் பீடைகள்:
பொதுவாக சகல துளைக்கும் வண்டுகள், புழுக்கள் மற்றும் குத்தி உறிஞ்சும் பூச்சிகள்.
குறிப்பாக நெல் இலைச் சுருட்டுப் புழு, வெட்டுக்கிளி, கபிலத்தத்தி மற்றும் பச்சைத் தத்துப்பூச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.
தக்காளியில் பழத்துளைப்பானை கட்டுப்படுத்தும்.
மலர்ச் செடிகளில் தோன்றும் பச்சைப் புழு (ஹலியாதிஸ்) மற்றும் புரொடீனியா புழு (ஸ்போடோட்டீரா) ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.
அனைத்து காய்ப்புழுக்கள் மற்றும் வெள்ளை வண்டு.
கரும்பு தண்டு துளைப்பான்கள், தென்னை காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு வண்டு ஆகியவைகளையும் கட்டுப்படுத்தும்.
கத்தரி, வெண்டி, தக்காளி, மிளகாய், பீன்ஸ், அவரையில் தோன்றும் காய்த்துளைப்பானுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
மாமரத்தில் தோன்றும் கபிலத் தத்தி மற்றும் புழுக்கள், தேக்கு மரத் துளைப்பான் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.
பெவேரியா பேசியானா நுண்ணுயிரானது, பயிர்களின் இலையை உண்ணும் புழுக்களுக்கு எதிராகச் சிறப்பாக செயல்படுகிறது. இதை ஏக்கருக்கு இரண்டு லீட்டர் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். பொதுவாக பதினான்கு நாள்களுக்கு ஒருமுறை அல்லது தாக்குதல் வீரியம் அதிகமாயின் இரண்டு முறை பயன்படுத்தலாம்.
16 லீட்டர் தாங்கிக்கு 300 மில்லி என்ற அளவில் இதனைக் கலந்து, பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், வண்டுகள், புழுக்கள் மேல் நேரடியாகத் தெளிக்கப்பட்டு, மூன்று தொடக்கம் ஆறு நாள்களில் (சூழல் வெப்பநிலையைப் பொறுத்து) White Muscardine Disease எனும் நோயை உருவாக்கி, இயங்க முடியாத நிலைக்கு அவைகளை இட்டுச் சென்று அழிக்கும்.
இவற்றால் தாக்கி அழிக்கப்பட்ட பூச்சிகள், வண்டுகளை நுண்ணோக்கி மூலம் பார்க்கும்போது அவை வெண்மையாக ஒளிரும்.
இலங்கையில் தனிப்பட்ட முறையில் இதனைப் பயன்படுத்திப் பயனடைந்த பயனர்களின் அனுபவங்களின் தொகுப்பு
🌾 நெல் வயலில் பேவேரியா
வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தில் உள்ள சில இயற்கை விவசாயிகள் கடந்த சில வருடங்களாக நெல் வயலில் கபிலத்தத்திகளை கட்டுப்படுத்த இதனை இரண்டு அல்லது மூன்று தடவை விசிற, பீடைகள் கட்டுப்பட்டதாக அனுபவத்தினை பகிர்ந்துகொண்டனர்.
அதேபோல் மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறையில் உள்ள சில இயற்கை விவசாயிகளும் தமது நெல் வயல்களில் இதனைப் பயன்படுத்தி கபிலத்தத்தி (அறக்கொட்டி)யை அண்மைக்காலங்களில் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளனர்.
🌽 சோளம் செய்கையில் பேவேரியா
மகா ஓயா, பதியதலாவ மற்றும் மகியங்கனை பகுதியில் அமைந்துள்ள சோளம் தோட்டங்களில் தனிப்பட்ட பரிசோதனாரீதியாக இவை செடிகளின் குருத்தினூடாக விசிறிய போது படைப்புழுவிற்கு எதிரான நல்ல பலன் கிடைத்தது.
நாம் ஏற்கனவே எமது CSJ Agri முகநூல் பக்கத்தில் சோளம் செய்கையில் பேவேரியாவைப் பயன்படுத்தி வெற்றிகரமாக செய்யப்பட்ட பரிசோதனைகள் பற்றி பதிவிட்டுள்ளோம்.
🌴 தென்னை வண்டு கட்டுப்பாட்டில் பேவேரியா
வாகரை, கிராந்துரு கோட்டே மற்றும் மகா ஓயா பகுதியில் இரசாயன நஞ்சு பயன்படுத்தப்படாத தென்னை மரங்களில், குருத்து மூலம் இவற்றை செலுத்தி சிவப்பு மற்றும் காண்டாமிருக வண்டுகள் சிறப்பாக கட்டுப்பட்டமை தோட்ட உரிமையாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
🥬 ஏற்றுமதிக்கான சலாது இலை உற்பத்தியில் பேவேரியா
நுவரேலியா மாவட்டத்தில் உள்ள நஞ்சற்ற இயற்கை மரக்கறிகளை மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மாலைதீவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் தோட்டங்களில், பூச்சி மற்றும் வண்டுகளை அழிக்க பேவேரியா பயன்படுத்தப்படுகிறது. இங்கு விளையும் சலாது இலைகள் 99% வெற்றிகரமாக விளைவிக்கப்படுகின்றன.
🥭 மாவுப்பூச்சி / அழுக்கணம் / Mealybugs இனை கட்டுப்படுத்தும் பேவேரியா
தென் மற்றும் வடமத்திய மாகாண ஏற்றுமதி மாம்பழ செய்கையில்,
இவற்றின் கல்சியத்தாலான மேலுறையைச் சிதைக்க மதுசாரம் (Surgical Spirit) விசிறி, 24 மணி நேரத்தின் பின், 48 மணி நேரத்தின் முன் பேவேரியாவை விசிறி, மீண்டும் 7 நாட்கள் மற்றும் அதன் பின் 14 நாட்கள் இடைவெளியில் பிரயோகித்த போது கணிசமான பலன் கிடைத்தது.
இவை இயற்கை விவசாயத்தில் நஞ்சற்ற இயற்கை பீடை கொல்லியாக ஐரோப்பிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டவை. மேலும் இந்திய சந்தைகளில் இவை பரவலாக, இலகுவாகக் கிடைப்பதுடன் அங்குள்ள இயற்கை விவசாயிகளால் சிறப்பான முறையில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையிலும் அரசாங்கமானது இரசாயன நஞ்சு உற்பத்தி / இறக்குமதி செய்யும் வர்த்தக அழுத்தங்களுக்கு அடிபணியாது, இவற்றை மிக விரைவில் அங்கீகரிப்பதானது, நஞ்சற்ற விவசாயத்தினை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி, நஞ்சு விவசாயத்துடன் சிறப்பான போட்டியை கொடுத்து, நஞ்சற்ற விளைபொருட்களின் விலையை குறைத்து, ஏழைகளுக்கும் நஞ்சற்ற உணவு சென்றடைய நிச்சயம் வழிசமைக்கும்.
மேலதிக விபரங்களுக்கு
CSJ Agri
076 225 0017
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Eco-friendly Control of Brown Planthopper and Fruit Fly
At a recent meeting of an organic farming organization established by young engineers who cultivate millet and paddy using chemical-free methods over nearly 150 acres in the Northern Province, it was stated that the brown planthopper (Arakkotti) infestation in their paddy fields in the Kilinochchi and Mullaitivu districts was successfully controlled 100% through three applications of a microbial formulation known as Beauveria bassiana, obtained from a research laboratory in Colombo.
Beauveria bassiana, a white fungus, is used as a non-toxic biological insecticide and is approved and widely used in many agriculturally advanced countries (except Sri Lanka).
Pests controlled by Beauveria bassiana include:
- In general, all boring beetles, caterpillars, and piercing-sucking insects.
- Specifically, it controls rice leaf folder, grasshopper, brown planthopper, and green leafhopper.
- Controls fruit borers in tomato.
- Controls green caterpillar (Heliothis) and Prodenia caterpillar (Spodoptera) found in flowering plants.
- Controls all pod borers and white grubs.
- Controls sugarcane stem borers, coconut rhinoceros beetle, and red weevil.
- Can be used against pod borers in brinjal, okra, tomato, chilli, beans, and lablab.
- Controls brown planthopper and caterpillars in mango, as well as teak shoot borers.
Beauveria bassiana is highly effective against leaf-eating caterpillars. It should be applied at a rate of 2 litres per acre. Generally, it can be applied once every 14 days, or twice if the infestation is severe.
Mix 300 ml in a 16-litre sprayer and spray directly onto insects, beetles, and caterpillars attacking crops. Within 3 to 6 days (depending on ambient temperature), it causes White Muscardine Disease, rendering the pests inactive and eventually killing them.
Insects and beetles killed by this treatment appear white when observed under a microscope.
Compilation of user experiences in Sri Lanka through individual use
🌾 Beauveria in paddy fields
Some organic farmers in Vavuniya, Kilinochchi, Mullaitivu, and Jaffna have shared their experiences over the past few years, stating that spraying Beauveria two or three times successfully controlled brown planthoppers in paddy fields.
Similarly, some organic farmers in Batticaloa, Akkaraipattu, Addalaichenai, and Sammanthurai have recently succeeded in controlling brown planthopper (Arakkotti) in their paddy fields using this method.
🌽 Beauveria in maize cultivation
In maize fields located in the Maha Oya, Padiyathalawa, and Mahiyanganaya areas, experimental application through the plant whorl produced good results against armyworm.
We have previously shared posts on our CSJ Agri Facebook page about successful experimental trials using Beauveria in maize cultivation.
🌴 Beauveria in coconut beetle control
In chemical-free coconut plantations in the Vakarei, Granthuru Kotte, and Maha Oya areas, plantation owners have recorded effective control of red weevil and rhinoceros beetle by applying Beauveria through the crown of the palm.
🥬 Beauveria in export-oriented lettuce production
In farms of companies exporting chemical-free organic vegetables from the Nuwara Eliya District to Middle Eastern countries and the Maldives, Beauveria is used to control insects and beetles. Lettuce leaves produced here achieve a 99% success rate.
🥭 Beauveria for controlling mealybugs
In export mango cultivation in the Southern and North Central Provinces, spraying surgical spirit to break the calcium-based outer layer of mealybugs, followed by Beauveria application after 24 hours and before 48 hours, and then reapplying at 7-day and 14-day intervals, yielded significant results.
These are approved as non-toxic natural pest control agents in organic farming by European countries. They are also widely and easily available in Indian markets and are being successfully used by organic farmers there.
If the Sri Lankan government refrains from yielding to commercial pressure from chemical pesticide manufacturers and importers and approves these products promptly, it will elevate organic farming to the next level, enable healthy competition with chemical agriculture, reduce the prices of organic produce, and ensure access to chemical-free food for low-income communities.
For further information:
CSJ Agri
076 225 0017

