Trouble Sleeping? Just Keep These 5 Plants in Your Bedroom நவீன வாழ்க்கை முறையில் பலரும் தூக்கமின்மையால் பெரும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள்.
இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள சில இயற்கை முறைகள் உதவக்கூடும்.
அதில் முக்கியமானது, உங்கள் தூங்கும் அறையில் சில செடிகளை வளர்ப்பது.
அவ்வாறு வளர்க்கும் ஐந்து செடிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
🛑பாம்பு செடி (Snake Plant)

இவை இரவில் ஆக்ஸிஜனை வெளியேற்றும் தன்மை கொண்டவை.
இதனால் காற்றின் தரம் மேம்படும்.
காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் (Formaldehyde) மற்றும் பென்சீன் போன்ற நச்சுக்களை உறிஞ்சி காற்றைச் சுத்தப்படுத்துகின்றது.
இதனால் தூக்கத்தின் இடையே நன்கு மூச்சுவிட்டு நிம்மதியாக உறங்கலாம்.
🛑லாவெண்டர் (Lavender)

இதிலிருந்து வரும் நறுமணமானது மனதுக்கு அமைதியை கொடுக்கும்.
அதனால் மனம் ரிலாக்ஸாகும்.
இதன் அருகில் தூங்கும் போது இந்த நறுமணத்தால் உங்கள் மன அழுத்தம் குறையும்.
எனவே நல்ல உறக்கம் கிடைக்கும்.
🛑Peace Lily

இவ்வகை செடிகள், காற்றை சுத்திகரிக்கும் தன்மை கொண்டவை.
அறையின் ஈரப்பதத்தை ஐந்து வீதம் வரை அதிகரிக்கவும் செய்யும்.
இதுபோன்ற காரணங்களால் இவை அறையில் இருந்தால் இதமாக தூங்கலாம்.
🛑கற்றாழை செடி (Aloe vera plant)

இதுவும் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் திறன் கொண்டது.
நச்சு வாயுக்களை உறிஞ்சி காற்றை தூய்மையாக்கும்.
ஆகவே ஆழமான தூக்கத்திற்கு இது உதவும்.
🛑இங்கிலீஷ் இவி செடி (english ivy plant)

இது காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட், பென்சீன் மற்றும் டோலுயீன் போன்ற நச்சுக்களை நீக்குகின்றது.
இதனால் தூய்மையான காற்று மூளைக்கு அமைதி தந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Trouble Sleeping? Just Keep These 5 Plants in Your Bedroom
In today’s modern lifestyle, many people suffer from insomnia and sleep-related problems.
Some natural remedies can help manage this issue.
One of the most effective methods is growing certain plants in your bedroom.
Let’s take a look at five such plants.
🛑 Snake Plant
Snake plants release oxygen at night, which helps improve air quality.
They absorb toxins such as formaldehyde and benzene from the air and purify it.
As a result, you can breathe better and sleep peacefully throughout the night.
🛑 Lavender
The pleasant fragrance of lavender provides a calming effect on the mind.
It helps you relax and reduces stress.
Sleeping near lavender can lower anxiety levels and promote better sleep.
🛑 Peace Lily
Peace lilies are known for their air-purifying qualities.
They can also increase room humidity by up to five percent.
Because of these benefits, having this plant in your bedroom can help you sleep more comfortably.
🛑 Aloe Vera Plant
Aloe vera also releases oxygen at night.
It absorbs harmful gases and helps purify the air.
This can support deeper and more restful sleep.
🛑 English Ivy Plant
English ivy removes toxins such as formaldehyde, benzene, and toluene from the air.
Cleaner air helps calm the mind and promotes deep, restful sleep.
