Special Notice for G.C.E. Ordinary Level Candidates நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இம்முறை பரீட்சையின் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது வினாத்தாள்களுக்கான பரீட்சை நேர அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவக்கூடிய உறுதிப்படுத்தப்படாத அல்லது பழைய கால அட்டவணைகளை நம்பி ஏமாற வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
காலை 8:30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகும். மாணவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே (காலை 7:30 மணிக்குள்) பரீட்சை நிலையங்களுக்குச் சமூகமளிக்க வேண்டும்.
பிற்பகல் 1:30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகும். மாணவர்கள் பிற்பகல் 12:30 மணிக்குள் நிலையங்களுக்கு வருகை தர வேண்டும்.
பரீட்சை நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னர் உங்களது பரீட்சை அனுமதிப்பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டையைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு நினைவூட்டப்படுகிறீர்கள்.
அடையாள ஆவணங்கள்: தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றில் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.
தனியார் விண்ணப்பதாரிகள் தேவைப்படின், கிராம உத்தியோகத்தரினால் உறுதிப்படுத்தப்பட்ட தற்காலிக அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம்.
கைத்தொலைபேசிகள், Bluetooth சாதனங்கள், Smart Watch-கள், குறிப்புக்கள் அல்லது ஆவணங்கள் எதனையும் மண்டபத்திற்குள் கொண்டு செல்ல முடியாது.
விடையளிக்கத் தொடங்குவதற்கு முன் வினாத்தாள் அறிவுறுத்தல்களை நன்கு வாசிக்கவும்.
பிழைகளைத் திருத்த Tipp-Ex (Correction fluid) பயன்படுத்தக் கூடாது. பிழையான பகுதியை ஒரு கோட்டினால் வெட்டிவிட்டு மீண்டும் எழுத வேண்டும்.
எழுத்துக்கள் தெளிவாக இருப்பதையும், மேலதிக தாள்கள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பரீட்சை மண்டபத்தில் மற்ற மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தப்படுவதற்கு காரணமாக அமையலாம்.
முகத்தை தெளிவாக அடையாளம் காணக்கூடிய வகையில் (முகம் மூடிய ஆடைகளைத் தவிர்த்து) பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Special Notice for G.C.E. Ordinary Level Candidates
The Commissioner General of Examinations, Indika Kumari Liyanage, has requested candidates to pay close attention to the timetable of the 2025 (2026) G.C.E. Ordinary Level Examination, which will commence tomorrow (17).
Compared to previous years, changes have been made this time to the examination timetable for the fifth, sixth, seventh, and eighth question papers.
Candidates are advised to refer only to the timetable published on the official website and the official Facebook page of the Department of Examinations.
She strongly emphasized that candidates should not rely on unverified or outdated timetables circulating on social media.
The morning session examination will begin at 8:30 a.m. Students must report to their examination centers at least one hour earlier (by 7:30 a.m.).
The afternoon session examination will begin at 1:30 p.m. Students must arrive at their examination centers by 12:30 p.m.
Candidates are reminded to check their admission card and National Identity Card before leaving for the examination center.
Accepted identity documents include the National Identity Card, passport, or driving license.
Private candidates, if necessary, may use a temporary identity certificate certified by the Grama Niladhari.
Mobile phones, Bluetooth devices, smart watches, notes, or any documents are strictly prohibited inside the examination hall.
Candidates must carefully read the instructions on the question paper before beginning to answer.
The use of Tipp-Ex (correction fluid) is not allowed. Incorrect portions should be neatly crossed out with a single line and rewritten.
Ensure that your handwriting is clear and that any additional answer sheets are properly attached.
Candidates must not cause any disturbance to other students in the examination hall. Doing so may result in the suspension of examination results.
Candidates are requested to report to examination centers in a manner that allows clear facial identification (avoiding face-covering attire).
