Heavy Rainfall Expected Today
Heavy Rainfall Expected Today

இன்று பலத்த மழைவீழ்ச்சி

Heavy Rainfall Expected Today நாட்டின் சில பகுதிகளில் இன்று 75 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும், மாத்தளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Heavy Rainfall Expected Today

The Department of Meteorology has forecast that heavy rainfall of up to 75 millimeters may be recorded in some parts of the country today.

Accordingly, intermittent showers are expected in the Northern, North Central, Uva, Eastern, and Southern Provinces, as well as in the districts of Matale, Polonnaruwa, and Nuwara Eliya.

In addition, thundershowers may occur in other parts of the country after 1:00 p.m., the department stated.

In this situation, the Department of Meteorology has advised the public to take necessary safety precautions to minimize damage caused by lightning and heavy rains.