Announcement of Practical Examination Dates for G.C.E. Advanced Level Examination 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகளுக்கான திகதிகளை இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, அடுத்த மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நாடு முழுவதும் பொறியியல் தொழில்நுட்பப் பாடத்தின் எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரர்களுக்கான செயன்முறைப் பரீட்சைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நடனம், பரதநாட்டியம், சங்கீதம் மற்றும் கர்நாடக சங்கீதம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் அடுத்த மாதம் 9 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெற உள்ளன.
மேற்கத்திய இசை, சிங்களம், ஆங்கிலம் மற்றும் நாடகம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகளும் அடுத்த மாதம் 9 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும்.
இதன்படி, பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Announcement of Practical Examination Dates for G.C.E. Advanced Level Examination
The Department of Examinations of Sri Lanka has announced the dates for the practical examinations of the 2025 G.C.E. Advanced Level Examination.
Accordingly, arrangements have been made to conduct the practical examinations for candidates who sat for the written examination of the Engineering Technology subject from the 6th to the 15th of next month, islandwide, the Department of Examinations stated.
In addition, the practical examinations for the subjects of Dance, Bharatanatyam, Music, and Carnatic Music will be held from the 9th to the 16th of next month.
The practical examinations for Western Music, Sinhala, English, and Drama will also be conducted from the 9th to the 16th of next month.
Accordingly, admission cards of school candidates have been sent to the respective school principals.
Meanwhile, the admission cards of private candidates have been dispatched by post to the addresses mentioned in their applications, the Department of Examinations announced.
