அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகிறது 💁♀️✨
ஆனால் அதனை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை என்பது சில நேரங்களில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கலாம் ⚠️
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம் 🌿👇
🛑 தேவையான பொருட்கள்
🥥 தேங்காய் எண்ணெய் – 2 கப்
🌿 கறிவேப்பிலை – 1 கைப்பிடி
🛑 பயன்படுத்தும் முறை
முதலில் கறிவேப்பிலையை சுத்தம் செய்து நிழலில் உலர வைத்து எடுத்துக்கொள்ளவும் 🌿☀️
இதையடுத்து ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் வைத்து காய்ச்சிக் கொள்ளவும் 🔥🥥
பின் தேங்காய் எண்ணெய் லேசாக சூடானதும் அதில் கறிவேப்பிலை இலைகளை மிக்ஸியில் பொடியாக அரைத்து சேர்த்து நன்கு காய்ச்சவும் 🌀🌿
எண்ணெய் நன்கு சூடு ஆறிய பின்னர் ஒரு டப்பாவில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும் 🫙
இந்த கறிவேப்பிலை எண்ணெயை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வர, தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் நன்கு வளரும் 💇♀️🌿✨
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.