விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிதி உதவியாளரின் களவிஜயம் முக்கிய செய்திகள்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிதி உதவியாளரின் களவிஜயம்

🔄 Updated:
1 min read
💬 0

விவேகானந்த சமுதாய அறக்கட்ளையானது சமூக மாற்றத்திற்கான வலுவூட்டலை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வரும் அதேவேளை பின்தங்கிய மற்றும் தேவைப்பாடுடைய பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி அவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத்தொகை ஒன்றை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்விக்கான பங்களிப்பை முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையுடன் இணைந்து பல்வேறு செயற்பாடுகளுக்கு அனுசரணை வழங்கும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு.ரகுபதி நடராஜா அவர்கள் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு கள விஜயம் மேற்கொண்டார். அறக்கட்டளையினூடாக பல்வேறு செயற்பாடுகளுக்கும் நிதி அனுசரணை வழங்கி வரும் நிலையில் 7 பாடசாலை மாணவர்களைப் பொறுப்பெடுத்து அவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத்தொகை வழங்கி வருவதோடு நின்றுவிடாமல் அவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்லூரிக்கான கள விஜயம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அவரால் பொறுப்பெடுக்கப்பட்ட மாணவர்களைச் சந்தித்ததுடன் அவர்களின் அடைவுமட்டங்கள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியதோடு கல்லூரியின் செயற்பாடுகளையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிதி உதவியாளரின் களவிஜயம்
விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிதி உதவியாளரின் களவிஜயம்
விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிதி உதவியாளரின் களவிஜயம்

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.