கிளிநொச்சியில் 11 வயதுடைய சிறுவனின் சாதனைப் பயணம்! Uncategorized

கிளிநொச்சியில் 11 வயதுடைய சிறுவனின் சாதனைப் பயணம்!

1 min read
💬 0

கிளிநொச்சி (Kilinochchi) கோணாவில் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் டியோஜன் எனும் 11 வயதுடைய குறித்த மாணவன் இலங்கையை சுற்றி முழுமையாக நடை பயணம் ஒன்றினை இன்று (25) ஆரம்பித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடையாத நிலையில், சிறுவயதில் ஏதாவது ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் குறித்த பயணத்தை ஆரம்பித்துள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக சமய நிகழ்வுகளுடன் ஆரம்பித்த பயணம் முல்லைத்தீவு நோக்கி ஆரம்பமானது.
குறித்த பயணத்தை குடும்ப உறுப்பினர்களும், சமயத்தலைவர்களும், பிரதேச மக்களுமாக இணைந்து ஆரம்பித்து வைத்துள்ளனர்.

குறித்த சிறுவனுடன் அவரது தந்தையும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.