ஜீவானந்தா சிறுவர் இல்லத்தில் மேலதிக வகுப்புகள் ஆரம்பம்
ஜீவானந்தா சிறுவர் இல்லத்தில் மேலதிக வகுப்புகள் ஆரம்பம்

ஜீவானந்தா சிறுவர் இல்லத்தில் மேலதிக வகுப்புகள் ஆரம்பம்

Extra Classes Started at Jeevananda Children’s Home விவேகானந்த சமுதாய அறக்கட்டளை (VCF) பல்வேறு மனிதநேய மற்றும் கல்வி சார்ந்த திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பின்தங்கிய மற்றும் தேவையுடைய சமூகங்களை மையப்படுத்தி கல்வி உதவி, இளைஞர் திறன் மேம்பாடு, பெண்கள் வலுவூட்டல் மற்றும் வாழ்வாதார முன்னேற்ற திட்டங்கள் ஆகியவற்றை இந்நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் சமூக மாற்றத்திற்கான பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் மற்றுமொரு செயற்பாடாக, ஜீவானந்தா சிறுவர் இல்லத்தில் தங்கி கல்வி பயிலும் மாணவிகள் மற்றும் குறித்த பகுதியில் உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சிறுமிகளையும் இணைத்து மேலதிக வகுப்புகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில், 21.03.2026 அன்று ஜீவானந்தா சிறுவர் இல்லத்தில் ஆங்கிலம் மற்றும் கணித வகுப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதேவேளை, ஜீவானந்தா சிறுவர் இல்லத்தில் கடந்த 2 வருடங்களாக பண்டிகை காலங்களில் புத்தாடைகள், சிறப்பு தினங்கள் மற்றும் நன்கொடையாளர்களின் பிறந்த தினங்களின் போது உணவு வழங்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு செயற்பாடாக தற்போது மேலதிக வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் ஏனைய முக்கிய பாடங்களுக்கும் இந்த வகுப்புகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜீவானந்தா சிறுவர் இல்லத்தில் மேலதிக வகுப்புகள் ஆரம்பம்
ஜீவானந்தா சிறுவர் இல்லத்தில் மேலதிக வகுப்புகள் ஆரம்பம்
ஜீவானந்தா சிறுவர் இல்லத்தில் மேலதிக வகுப்புகள் ஆரம்பம்

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Extra Classes Started at Jeevananda Children’s Home

The Vivekananda Community Foundation (VCF) is implementing various humanitarian and educational initiatives. Focusing on underprivileged and needy communities, the organization conducts programs in educational support, youth skill development, women empowerment, and livelihood improvement.

As another initiative aimed at social transformation with the support of diaspora members, VCF has planned to conduct extra classes at Jeevananda Children’s Home. These classes bring together students residing at the home and underprivileged girls living in nearby poverty-stricken areas.

Accordingly, on March 21, 2026, English and Mathematics classes were inaugurated at Jeevananda Children’s Home.

The event was held under the leadership of the College Registrar, Mr. K. Pratheeswaran.

Furthermore, for the past two years, Jeevananda Children’s Home has been conducting activities during festival seasons, special occasions, and donors’ birthdays, providing meals for the children. As part of this ongoing effort, extra classes have now commenced, and it is noteworthy that these classes will be expanded to include other important subjects in the future.