Sharp Change in Fuel Prices
Sharp Change in Fuel Prices

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்

Sharp Change in Fuel Prices சினோபெக் நிறுவனத்தினால், ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் விலை 28 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அதன் புதிய விலை 600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

92 ஒக்டேன் ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றிற்கு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விலையையே சினோபெக் நிறுவனம் பின்பற்றுகிறது.

இந்த நிலையில், 95 ஒக்டேன் ரக பெற்றோல் மற்றும் சூப்பர் டீசல் ஆகிய பிரீமியம் ரக எரிபொருட்களின் விலைகள், சர்வதேச சந்தை விலைகளுக்கு ஏற்ப, அரசாங்கத்தின் அனுமதியுடன் மாற்றியமைக்கப்படுவதாக சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த விலைகள் அமுலில் இருக்கும் என சினோபெக் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Sharp Change in Fuel Prices

The Sinopec company has increased the price of a litre of super diesel by 28 rupees.

Accordingly, the new price has been set at 600 rupees.

For 92-octane petrol and auto diesel, the company continues to follow the government-approved retail prices.

Meanwhile, Sinopec stated that the prices of premium fuels such as 95-octane petrol and super diesel are revised in line with international market prices, with government approval.

These prices will remain in effect until further notice, according to a statement issued by the company.