ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும வெளியிட்டுள்ளார்.
அதன்போது, இன்று (08) முதல் அத்தியாவசிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஒரு நாள் சேவையாக தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் தேசிய அடையாள அட்டைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்க மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தேசிய அடையாள அட்டைத் தகவல்களைச் சரிபார்ப்பதற்கும், அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கும் மாற்று முறைகளைக் கையாளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை அத்திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளதுடன், மற்ற அனைத்து சேவைகளும் செயல்படாது என்றும் தெரிவித்துள்ளது.
அதன்படி, தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் பொதுச் சேவை/முன் அலுவலகம் மறு அறிவிப்பு வரும் வரை செயல்படாது என்றும், கணினி அமைப்பு சீரமைக்கப்பட்ட பின்னர் அனைத்து சேவைகளும் தொடர்ந்து செயல்படும் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.