மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (22) மேலும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.39 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்ததுள்ளது.
அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98.32 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
மசகு எண்ணெய்யைப் போன்றே இயற்கை எரிவாயுவின் விலையிலும் இன்று சரிவு பதிவாகியுள்ளது.
சந்தை தரவுகளின்படி, இதன் விலை 2.68 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழல் பொதுவாக எரிசக்தி விலைகளை அதிகரிக்கச் செய்யும் என்ற போதிலும், உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் எரிசக்தி கையிருப்பு தொடர்பான காரணிகளால் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.