மாதம் ஒரு களம் Uncategorized

மாதம் ஒரு களம்

1 min read
💬 0

22.04.2026 அன்று பெண்கள் அபிவிருத்தி நிலையத்தில் தையல் டிப்ளோமா (Diploma in Tailoring) பயிலும் 20 மாணவிகளுக்காக, அவர்களது வாழ்வாதாரத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் விசேட தொழில்முனைவோர் விழிப்புணர்வு பட்டறை (Entrepreneurship Awareness Workshop) சிறப்பாக நடைபெற்றது.

தையல் கலையைக் கற்று முடித்த கையோடு, அதனை வெற்றிகரமான தொழிலாக மாற்றுவது எப்படி என்பதை இந்தப் பயிற்சி அவர்களுக்குத் தெளிவுபடுத்தியது. இந்தப் பட்டறையானது ‘மாதம் ஒரு களம்’ என்ற கருப்பொருளுக்கு அமைவாக நடாத்தப்பட்டது.

இந்தப் பட்டறையில், ஒரு தொழிலை ஆரம்பிக்கும் போது பின்பற்ற வேண்டிய நவீன உத்திகளான Lean Model Canvas மற்றும் MVP (Minimum Viable Product) முறைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. அதாவது, அதிக முதலீடின்றி சிறிய அளவில் ஆரம்பித்து, படிப்படியாகத் தொழிலை எவ்வாறு விரிவுபடுத்துவது என்பது குறித்து மாணவிகள் அறிந்துகொண்டனர்.

அத்துடன், ESBI Framework மூலம் ஒரு ஊழியராக இருப்பதற்கும் ஒரு தொழிலதிபராக மாறுவதற்கும் இடையிலான மாற்றங்கள் மற்றும் நுணுக்கங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன.

இன்றைய டிஜிட்டல் உலகில் வாடிக்கையாளர்களை எளிதாகச் சென்றடைய WhatsApp Business செயலியை எவ்வாறு தொழில்முறை ரீதியாகப் பயன்படுத்துவது என்ற பயிற்சியுடன் இந்தப் பட்டறை நிறைவடைந்தது.

மாதம் ஒரு களம்
மாதம் ஒரு களம்
மாதம் ஒரு களம்
Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.