போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமையைக் கருத்திற்கொண்டு, கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதாக பிரீமா (Prima) நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, ‘பிரீமா மில்க்’ ரக கோதுமை மாவின் விலை ஒரு கிலோகிராமுக்கு 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பின் படி, இதுவரை 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் மாவின் புதிய சில்லறை விலை 225 ரூபாயாக உயர்ந்துள்ளது.
போக்குவரத்துச் செலவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகவே இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.