விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது தசாப்தம் கடந்த சேவையினை மட்டக்களப்பு மண்ணிற்கு வழங்கி வரும் உன்னத பணியை ஆற்றி வருகின்றது.
உயர்தரத்தின் பின்னர் பல்கலைக்கழக வாய்ப்பினை இழந்து அல்லது சாதாரண தரத்தோடு அல்லது அதற்கும் குறைந்த கல்வி மட்டத்தில் எதிர்கால சமூகத்தை எதிர்கொள்வதில் சவால்களை சந்திக்கும் இளைஞர், யுவதிகளுக்கு உயர் கல்வி என்றாலே பல்கலைக்கழகம் மட்டுமல்லாது பல்வேறு வழிகள் தற்போது எமது நாட்டின் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைப்பில் உள்ளன. ஒரு பட்டதாரிக்கு நிகரான அல்லது அதைவிட மேலான தொழில்முறைத் தகைமையை பெற்றுக்கொள்வதற்கான அடிப்படை களத்தினை ஏற்படுத்துவதில் பாரிய பங்காற்றி வருகின்றது.
இதன் அடிப்படையில், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிற்சி பெறும் தற்போது க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய காத்திருக்கும் பயிலுனர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, 28.04.2026 அன்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பிலான வழிகாட்டல் செயலமர்வு நடைபெற்றது.
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்களால் இந்த வழிகாட்டல்கள் கல்லூரியில் பயிற்சி பெறும் NVQ L3, CNT L4, Career Fit & IT பயிலுனர்களில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.


மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.