Betel farming

மட்டக்களப்பு வெற்றிலை விவசாயம்: வளர்ச்சி, சவால்கள் மற்றும் எதிர்காலப் பாதைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வெற்றிலை பயிர்செய்கை, அதன் சிறப்புமிக்க நுகர்வுத் தன்மையால் இலங்கை மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பிரபலமானதொரு வர்த்தக உற்பத்தி ஆகிறது. வெற்றிலை விவசாயிகள் பெரும்பாலும் எங்கள் கிராமங்களில் உள்ள சிறு நில உரிமையாளர்கள் மற்றும் குடும்பங்கள் சார்ந்தவர்களாக இருப்பதால், இது அவர்களின் வாழ்வாதாரத்துடன் நெருக்கமாக பின்னிப் பற்றியுள்ளது.


செழுமை நிறை மட்டக்களப்பு மாநிலத்தின் தென் பகுதியில் கடல், வற்றாத ஆறு மற்றும் குளங்கள் நிறைந்த தேத்தாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், குருக்கள்மடம் மற்றும் களுதாவளை போன்ற பிரதேசங்களில் ஆர்வத்தோடு செய்கை பண்ணப்படும் ஒரு பாரம்பரியப் பயிர், கற்ப்பக மூலிகையாக புராணங்களில் கருதப்படும் வெற்றிலை செடி என்றால் அது மிகையாகாது. வெற்றிலை (வெத்தில) என்று ஊர் வழக்கில் சொல்வர்). மண்ணை இடமாற்றி மிக இலகுவாக செய்யப்படும் இத்தொழில் மிக கவனமாக கண்காணிக்கப்பட வேண்டியதொன்றாக உள்ளது. இங்கு இதை வெற்றிலைத் தோட்டம் (Betel Garden) என்றே அழைப்பர்.

இந்தச் செடிக்குப்பின் இத்தனை பிரயோசனம் உண்டா என்று ஆச்சரியப்படப் போகிறீர்கள். அத்தனை மருத்துவ குணம் மற்றும் பயன்பாடு உள்ள ஒரு பொருள் உற்ப்பத்தியில், விவசாயிகள் அதற்கான நல்ல சந்தை வாய்ப்பு இல்லாமல் படும் அவதி கொஞ்ச நஞ்சமல்ல. இந்த வெற்றிலையைப் பயன்படுத்தி எத்தனையோ உற்ப்பத்திகள் உலகில் நடந்தேறினாலும், எமது பிரதேசத்தில் வெற்றிலை போடுவதற்க்கே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த பழக்கமுள்ளவர்கள் அருகிவருவதனால் அதன் கேள்வி வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

வெற்றிலை, ஒரு பாரம்பரிய மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிராக இருந்தாலும், சமீபகாலங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. விலைத்தளம்பல், சந்தை வர்த்தக கட்டுப்பாடுகள், இடைத்தரகர் ஆதிக்கம், அரசின் போதிய கொள்கை ஆதரவைப் பெறாமை போன்றவை இதன் முக்கியமான பிரச்சினைகளாக உள்ளன.

வெற்றிலை விவசாயத்தின் வரலாற்றுச் சுருக்கம்


இலங்கையின் வெற்றிலை விவசாயம் சுவைமிக்க தன்மையால் பல்வேறு நாடுகளில் பரவலாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தேற்றாத்தீவு, களுதாவளை போன்ற கிராமங்களில் சீரான மழைப்பொழிவு மற்றும் வளமான மண் காரணமாக வெற்றிலை செடிகள் செழித்து வளைகின்றன. வரலாற்றாக, இதன் முக்கிய சந்தைகள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மிடில் ஈஸ்ட் நாடுகளாக அமைந்துள்ளன.

இருப்பினும், 2000-களின் பிற்பகுதியில் இருந்து, இலங்கை வெற்றிலை விவசாயம் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளது. உலகளவில் புகையிலை சார்ந்த பொருட்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள், குறைந்த விலை நிர்ணயம், உள்ளூர் சந்தையில் இடைத்தரகர் ஆதிக்கம் போன்றவை விவசாயிகளை பாதித்துள்ளன.

சமீபகால சந்தை நிலை

2024-ம் ஆண்டு தரவுகளின்படி, இலங்கையின் வெற்றிலை ஏற்றுமதியில் 20%-த்திற்கும் அதிகமான சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வர்த்தக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்குக் காரணம், இந்தியா உள்ளிட்ட ஏற்றுமதி நாடுகளில் விதிக்கப்பட்ட உள்நாட்டு வரிகள் மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகள் ஆகும்.

மேலும், உள்ளூர் சந்தையில் வெற்றிலையின் விலை அதிகரிக்க முடியாத முக்கிய காரணங்களில் ஒன்று, பயன்பாட்டு முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகும். வெற்றிலை பாரம்பரிய முறையில் நுகர்வதற்குப் பதிலாக, பலரும் அதை சுவைக்காக மட்டும் மெல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இதனால், இதன் மிகுதி உற்பத்தி அவசியமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

விலைத்தளம்பல் மற்றும் இடைத்தரகர் ஆதிக்கம்

வெற்றிலை விவசாயத்தில் பெரிய பிரச்சினையாக விளங்குவது, விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் வெற்றிலையின் விலையை நிர்ணயிக்க முடியாமல் இருப்பதுதான். இது, இடைத்தரகர்கள் சந்தை விலையை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கும், விவசாயிகள் குறைந்த விலையில் தங்களது விளைபொருளை விற்கும் நிலை உருவாகுவதற்கும் காரணமாக இருக்கிறது.

இலங்கை விவசாய திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில், இடைத்தரகர்கள் வழியாக வெற்றிலை விற்பனை செய்யும் விவசாயிகள் அவர்களது உண்மையான வருவாயின் 40%-த்திற்கும் அதிகமான ஒரு பகுதியை இழக்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது அவர்களின் முழுமையான நஷ்டத்திற்கும் வழிவகுக்கின்றது.

தீவிர வேளாண்மை மற்றும் தரக் கட்டுப்பாடுகள்

இலங்கை வெற்றிலை ஒரு உயர் தரமான பயிராக உலக சந்தையில் அறியப்படுகிறது. ஆனால் சமீபகாலங்களில், வெற்றிலை உற்பத்தியில் ரசாயனப் பசளைகள் மற்றும் கிருமிநாசினிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், அதன் தரத்தில் மாற்றம் காணப்படுகிறது. சில சந்தைகள், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல சர்வதேச வர்த்தக அமைப்புகள், உயர் தரமான, ரசாயனம் குறைவான விவசாய முறையில் விளைந்த பொருட்களை மட்டும் ஏற்றுமதிக்கு அனுமதிக்கின்றன.

இந்த நிலையை மாற்றுவதற்காக, வெற்றிலை விவசாயிகள் மேம்பட்ட இயற்கை விவசாய முறைகளில் பயிற்சி பெறுவது அவசியமாகியுள்ளது. இதற்காக, அரசாங்கம் மற்றும் விவசாய சபைகள் உண்மைச் சான்றிதழ்கள் மற்றும் தரநிலை மதிப்பீடுகளை வழங்குவதை ஊக்குவிக்க வேண்டும்.

சமீபத்திய அரசியல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள்

2023-2024 தேர்தல் காலங்களில் வெற்றிலை விவசாயிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் சில புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

  • இலங்கை விவசாய மேம்பாட்டு நிதியம் (Sri Lanka Agricultural Development Fund) மூலம் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
  • இலங்கை வர்த்தகத் திணைக்களம் வெற்றிலை ஏற்றுமதிக்கு மேலும் புதிய சந்தைகளை தேடுவதாக அறிவித்தது.
  • நவீன உற்பத்தி முறைகள் மற்றும் சந்தைப் பேச்சுவார்த்தைகள் குறித்து விவசாயிகளுக்கு இலவச பயிற்சி வழங்க அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
  • விவசாயிகளின் எதிர்கால முன்னேற்றம்
  • வெற்றிலை விவசாயத்தை நவீன தொழில்நுட்பம், இ கொமர்ஸ் மற்றும் சர்வதேச வர்த்தகத்துடன் இணைப்பது வெற்றிகரமான தீர்வாக அமையலாம்.

இ கொமர்ஸ் தளங்கள் மூலம் நேரடி விற்பனை செய்யும் வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும்.
உலகளாவிய தரச்சான்றுகளைப் பெறுவதற்கான முயற்சிகள் அதிகரிக்க வேண்டும்.
உலக சந்தையின் தேவைக்கேற்ப வெற்றிலை சார்ந்த புதிய பொருட்களை உருவாக்க வேண்டும் (எ.கா: வெற்றிலை சார்ந்த இயற்கை மருத்துவப் பொருட்கள், உணவு சேர்க்கைகள் போன்றவை).

முடிவுரை

வெற்றிலை விவசாயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பாரம்பரியப் பயிராக இருந்தாலும், அதன் சந்தை நிலை தற்போது சவால்களை எதிர்கொள்கிறது. உற்பத்தியாளர்கள் தரக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும், அரசு மற்றும் வர்த்தகத் துறைகள் சந்தை அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென்றால், புதிய சந்தைகள், தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் அரசின் முறைமையான முகாமைத்துவம் தேவைப்படுகிறது. மட்டக்களப்பு வெற்றிலை விவசாயம் சர்வதேச சந்தையில் அதன் மரியாதையை மீட்டெடுக்க ஒரு புதிய யுக்தி தேவைப்படுகிறது.

இப்போது, நாம் அனைவரும் புதிதாக சிந்திக்க வேண்டும், புதுமைகளை சந்திக்க வேண்டும், விவசாயத்தை முன்னேற்றம் செய்ய வேண்டும்!

S தணிகசீலன்

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Batticaloa Betel Farming: Growth, Challenges, and Future Prospects

Betel cultivation, a significant part of the agricultural landscape in the Batticaloa district, is not only popular in Sri Lanka but has also gained international recognition due to its unique quality and consumption value. Since betel farming is primarily carried out by small-scale landowners and families in villages, it is closely tied to their livelihoods.

Flourishing in the fertile lands of the southern region of Batticaloa, enriched with the sea, perennial rivers, and lakes, betel farming is widely practiced in areas such as Thettathivu, Mangadu, Chettipalayam, Kurukkalmadam, and Kaludaweli. It is a traditional crop that has been valued as a medicinal herb in ancient texts. Locally, betel is often referred to as “Veththila.” This industry, which involves frequent soil replacement, requires meticulous monitoring. Betel farms in this region are commonly known as “Betel Gardens.”

You might be surprised to learn how beneficial this plant is. Despite its numerous medicinal properties and uses, betel farmers struggle due to a lack of profitable market opportunities. While betel has been utilized in various products worldwide, in our region, it is predominantly used for chewing. As the habit of betel chewing declines, demand for the crop has significantly decreased.

Although betel has both traditional and economic significance, in recent years, it has faced multiple challenges, including price fluctuations, market trade restrictions, intermediary dominance, and inadequate government policy support.

A Brief History of Betel Farming

Sri Lanka’s betel farming has historically been exported to various countries due to its rich flavor and quality. The villages of Thettathivu and Kaludaweli in Batticaloa, with their consistent rainfall and fertile soil, have provided ideal conditions for betel cultivation. Historically, its primary markets have been India, Pakistan, and Middle Eastern countries.

However, since the late 2000s, Sri Lanka’s betel farming has faced several ups and downs. Global restrictions on tobacco-related products, lower pricing, and the dominance of intermediaries in the local market have negatively affected farmers.

Recent Market Trends

According to 2024 data, Sri Lanka’s betel exports have declined by more than 20%, as reported by the Sri Lanka Trade Department. This is mainly due to domestic taxes and trade restrictions imposed by importing countries, including India.

Additionally, one of the key reasons for betel’s stagnant pricing in the local market is the shift in consumption habits. Instead of traditional betel chewing, many consumers now use it only for flavor, reducing the necessity for mass production.

Price Fluctuations and Middlemen Dominance

One of the major challenges in betel farming is that farmers lack control over pricing. Intermediaries have full authority over market prices, forcing farmers to sell their produce at low rates.

A report by the Sri Lanka Agriculture Department highlighted that farmers selling betel through intermediaries lose over 40% of their actual revenue. This significantly impacts their overall earnings and economic stability.

Intensive Farming and Quality Control

Sri Lanka’s betel is globally recognized as a high-quality product. However, in recent years, excessive use of chemical fertilizers and pesticides in betel farming has impacted its quality. Some international markets, particularly the European Union and global trade organizations, only accept exports that meet high-quality standards and are cultivated using minimal chemicals.

To address this, betel farmers must be trained in advanced organic farming techniques. The government and agricultural boards should encourage certifications and quality assessments to enhance global market acceptance.

Recent Government and Administrative Initiatives

During the 2023-2024 election period, the government announced several new initiatives to support betel farmers:

  • The Sri Lanka Agricultural Development Fund introduced low-interest loans for farmers.
  • The Sri Lanka Trade Department declared efforts to explore new export markets for betel.
  • The government planned free training sessions on modern production techniques and market negotiations for farmers.

Future Prospects for Farmers

Integrating betel farming with modern technology, e-commerce, and international trade could offer sustainable solutions.

  • Opportunities for direct sales through e-commerce platforms should be expanded.
  • Efforts should be increased to obtain global quality certifications.
  • New betel-based products should be developed in line with global market demands (e.g., betel-based herbal medicines and food additives).

Conclusion

Although betel farming has been a traditional practice in the Batticaloa district, its market position is currently facing significant challenges. Farmers must adhere to strict quality controls, while government and trade sectors should collaborate to develop market opportunities.

For farmers to safeguard their livelihoods, new markets, technological advancements, and systematic government management are essential. A strategic transformation is required for Batticaloa’s betel farming industry to reclaim its reputation in the international market.

Now, it is time for all of us to think innovatively, embrace new opportunities, and advance our agricultural sector!

S Thanigaseelan

For More Articles Visit Us Maatram News

Join Our Whatsapp Community Maatram News