மட்டுநகரிலிருந்து தெற்கே மண்முனைத்துறை வழியாக சுமார் ஒன்பது மைல் தொலைவில் கொக்கட்டிச்சோலை கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமம் இயற்கை அழகு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்துவம் பெற்று விளங்குகிறது. இது, பண்டைக் காலத்தில் ‘கொக்கட்டி’ மரங்கள் அதிகம் காணப்பட்டதனால், “கொக்கட்டிச்சோலை” என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிழல் மரங்களால் சூழப்பட்ட இக்கிராமத்தில், தான்தோன்றீஸ்வரர்(Kokkatticholai Thanthonreeswarar) ஆலயம் அமைந்துள்ளது. இந்த சிவன் ஆலயம் மட்டக்களப்பில் உள்ள பழமையான கோயில்களுள் முக்கியமானதாகும். இங்குள்ள இறைவன் சுயம்புலிங்கமாக தோன்றி அருள்பாலிக்கிறார். இந்த ஆலயம் தேசத்துக் கோயில்கள் என அழைக்கப்படும் பண்டைய மன்னர் காலத்தில் மதிப்பும் மானியங்களும் பெற்ற கோயில்களுள் ஒன்றாகும்.

வரலாற்று சான்றுகள் மற்றும் தொன்மை
“மட்டக்களப்பு மான்மியம்” எனும் நூலில் இக்கோயிலின் தோற்ற வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மண்முனை பகுதியை உலகநாச்சி எனும் அரசி ஆட்சி செய்த காலத்தில், வேடர் ஒருவர் தேன் எடுக்க ஒரு கொக்கட்டி மரத்தை வெட்டியபோது அதிலிருந்து உதிரம் வடிந்ததாகவும் இதனை கண்ட வேடன் அச்சமுற்று இந்த செய்தியை உலகநாச்சியிடம் தெரிவித்த பின்னர், அவர் அந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்றை கண்டெடுத்ததாகவும், இதனால் அந்த இடம் புனிதமாகக் கருதப்பட்டு, கோயில் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில், மட்டக்களப்பை ஆண்ட தருமசிங்க மன்னன் இந்த ஆலயம் அமைப்பதற்கு பாரிய பங்களிப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்தியாவிலிருந்து கதிர்காமத்தை நோக்கி சென்ற சித்தர்களான முத்துலிங்கம், கொக்கட்டியார் இப்பகுதியில் யாத்திரை மேற்கொண்டதாகவும், இப்போது கோயில் அமைந்துள்ள இடத்தில் கொக்கட்டியார் சமாதியடைந்ததாகவும், அவரது சமாதியில் இருந்து தோன்றிய சிவலிங்கம் பின்னர் கோயிலாக வளர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.
கோயில் சிறப்புகள்
தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் இறைவி பார்வதி அம்பிகையும் இறைவனுடன் இணைந்து அருள்பாலிக்கின்றார். ஆலயத்தின் தலவிருட்சம் கொக்கட்டி மரமாகும். இங்கு அமைந்துள்ள கொடித்தம்பம் 60 அடி உயரம் கொண்டதாகும். இது இலங்கையில் காணப்படும் மிக உயரமான கொடித்தம்பங்களில் ஒன்றாகும். ஆலய பரிபாலகரை “வண்ணக்கர்” என அழைப்பதோடு, இங்கு பூசை செய்பவர்கள் ‘சங்கமர்’ எனும் வீரசைவக் குருமார் ஆவர்.
மகோற்சவம் மற்றும் தேரோட்டம்
ஆவணி வளர்பிறை முதலாம் நாளில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவம், பதினைந்து நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாக “தேரோட்டம்” விளங்குகிறது. பல கோயில்களில் தேர்கள் வலம் வருவது காணப்பட்டாலும், “தேரோட்டம்” எனும் பாரம்பரிய வழக்கு கொக்கட்டிச்சோலை கோயிலுக்கே உரியதாகும்.
இவ்வாறு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயில், அதன் தொன்மை, ஐதீகங்கள், மற்றும் திருவிழாக்கள் மூலம் மட்டக்களப்பின் மத மற்றும் பண்பாட்டு மரபில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Kokkatticholai Thanthonreeswarar Temple– A Spiritual Treasure of Batticaloa
Located about nine miles south of Batticaloa via Manmunai Road, the village of Kokkatticholai is known for its natural beauty and historical significance. The village is said to have derived its name from the abundance of “Kokkatti” trees (a type of heron tree) that once thrived in the region.
Amidst the shade of these trees lies the Thanthonreeswarar Temple, a prominent and ancient Shiva temple in Batticaloa. The presiding deity here is believed to have manifested as a Swayambhu Lingam (self-emerging lingam). This temple was one of the “Desathuk Koils” (State Temples) during the ancient royal era, enjoying high status and receiving royal grants and endowments.

Historical Evidence and Legends
The temple’s origin is mentioned in the book “Mattakalappu Maanmiyam”. It is believed that during the reign of Queen Ulaganachchi, who ruled over the Manmunai region, a hunter once cut down a Kokkatti tree to collect honey and was shocked to see blood oozing from the tree. He reported this to the queen, who later discovered a Shiva Lingam at the site. This led to the establishment of the temple, which was later expanded with significant contributions from King Dharma Singh, the ruler of Batticaloa.
Additionally, legends say that Indian Siddhars (spiritual seekers), Muthulingam and Kokkattiyar, once undertook a pilgrimage to Kataragama through this region. It is believed that Kokkattiyar attained Samadhi (spiritual liberation) at this very spot. A Shiva Lingam is said to have emerged from his Samadhi, which later became the centerpiece of the temple.
Special Features of the Temple
At Thanthonreeswarar Temple, the goddess Parvathi Ambikai is worshipped alongside Lord Shiva. The Kokkatti tree is regarded as the Sthala Vriksha (sacred temple tree) here. One of the most notable features is the 60-foot tall temple flagpole, one of the tallest in Sri Lanka. The temple priests are known as “Sangamar”, belonging to the Veerasaiva tradition, and the temple caretaker is referred to as “Vannakkar”.
Grand Festival and Chariot Procession
The Maha Utsavam (Grand Festival) begins on the first waxing moon day of the Tamil month Aavani and lasts for fifteen days. The highlight of this festival is the “Therottam” or Chariot Procession, which is uniquely traditional to the Kokkatticholai temple, despite the presence of temple chariots elsewhere.
Thus, the Kokkatticholai Thanthonreeswarar Temple stands as a significant symbol of religious and cultural heritage in Batticaloa, cherished for its legends, historical roots, and grand festivals.
For more news Maatram News