Funeral arrangements for the late Mr Thuraiappah Thevarajah (Founder Trusteee of Ealing Amman Temple)

Funeral arrangements for the late Mr Thuraiappah Thevarajah (Founder Trusteee of Ealing Amman Temple)

Viewing Date: Saturday, 10th May

Time: 1:00 PM – 4:00 PM

Location: Angel Funeral Directors 267 Allenby Road Southall UB1 2HB

Funeral Day Schedule

Date: Sunday , 11th May 2025

08:00 AM – Leave home

09:00 AM to 11:00 AM – Final Ritual & Pooja Location: Harrow Masonic Centre Northwick Circle, Kenton HA3 0EL (Hall with parking available)

12:00 PM to 1:00 PM – Cremation Location: Hendon Crematorium Holders Hill Road Hendon, London NW7 1NB

After Cremation – Food Service Location: Harrow Masonic Centre Northwick Circle, Kenton HA3 0EL

இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயமானது ஆலயத்திற்கு கிடைக்கின்ற நிதியில் அதிகளவான நிதியினை இலங்கையில் உள்ள பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்கு கடந்த 30 வருடங்களிற்கு மேலாக வழங்கி வருகின்றது.

அந்த வகைகயில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் வலுவூட்டல், மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்கான செயற்பாடுகளிற்கு விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் செயற்பாடுகளில் இணைந்து செயற்படும் இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயமானது எமது விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியின் கொம்மாதுறை கிளையின் செயற்பாடுகளுக்கான நிதி அனுசரணையை கடந்த 5 வருடங்களாக வழங்கி வருகின்றது.

அவ்வாறே, முல்லைத்தீவில் அமைந்துள்ள பின்தங்கிய பிரதேசமான புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் மாணவர்களுக்கான உணவு, அத்தியாவசிய பொருட்கள், தளபாடங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் என வறிய மாணவர்களை மையப்படுத்தியதாக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அத்தோடு இடம்பெறுகின்ற அனர்த்த நிகழ்வுகளிற்கான அவசர உதவிகள் போன்ற உதவிகளையும் வழங்கி வருகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக முன்னின்று செயற்பட்ட
ஸ்தாபக அறங்காவலர்களில் ஒருவரான திருவாளர்.துரையப்பா தேவராஜா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு எமது வடகிழக்கு சமூகம் சார்பான ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.