இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! Uncategorized

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

1 min read
💬 0

நாட்டில் கடந்த சில நாட்களாக சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார் .

இந்த காய்ச்சல் ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா கூறினார்.

அதுமட்டுமின்றி டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக டெங்கு தொடர்பில் அவதானமாக இருக்குமாரும் டெங்கு கொடியது என்பதால், 0.1% வீதமானவர்கள் உயிரிழக்கலாம். எனவே வீடு, பாடசாலை உள்ளிட்ட இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இது இன்ஃபுளுவென்சா காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வேறொரு வைரஸ் காய்ச்சலாகவும் இருக்கலாம். எனவே இருமல், சளி, காய்ச்சல், உடல்வலி, வாந்தி மற்றும் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உரிய இரத்தப் பரிசோதனை செய்துகொள்மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.