இலங்கையில் புற்றுநோயாளர்கள் அதிகரிப்பு: எச்சரிக்கும் வைத்தியர் Uncategorized

இலங்கையில் புற்றுநோயாளர்கள் அதிகரிப்பு: எச்சரிக்கும் வைத்தியர்

1 min read
💬 0

இலங்கையில் தோல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தோல் நோய் வைத்திய நிபுணர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.
இந் நோய் தோலில் பயன்படுத்தப்படும் பல்வேறு அழகுசாதனப் பொருட்களும் ஒரு காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது.


தோலை ப்ளீச் செய்வதன் ஊடாக சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்களால் சருமம் நேரடியாக பாதிக்கப்படுவதாகவும் இனம் காணப்பட்டுள்ளது.
உண்மையில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.

தோலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் முறையான சிகிச்சைகளை பெற வேண்டும் என வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர அறிவுறுத்தியுள்ளார்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.