இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (E-NIC) தொடர்பான தகவல்கள் Uncategorized

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (E-NIC) தொடர்பான தகவல்கள்

1 min read
💬 0

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (E-NIC) விநியோகம் எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரங்களில் தொடங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பயன்படுத்த சுமார் 2.3 மில்லியன் புதிய அட்டைகள் ஏற்கனவே கிடைத்துள்ளன என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகளில் தனி நபர்களை அடையாளப்படுத்தும் உயிரியல் பண்புகள், அதாவது கைவிரல் அடையாளம், விழித்திரை, மற்றும் குருதி மாதிரிகள் ஆகியவை அடங்கும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய இலத்திரனியல் அடையாள அட்டையின் அறிமுகத்தினால் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி நடைபெறும் மோசடிகள் குறைவடையும் என்று திணைக்களம் எதிர்பார்க்கின்றது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.