உலகக்கிண்ண ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானிய மகளிர் அணியை தோற்கடித்தது. Uncategorized

உலகக்கிண்ண ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானிய மகளிர் அணியை தோற்கடித்தது.

1 min read
💬 0

சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் மகளிருக்கான 20க்கு 20 உலகக்கிண்ண போட்டிகளின் இன்றைய ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, பாகிஸ்தானிய மகளிர் அணியை 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தானிய அணி 20 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 105 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 4 விக்கட் இழப்புக்கு 108 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இடம்பெற்ற ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி, இலங்கை அணியை தோற்கடித்தது.
அத்துடன் அவுஸ்திரேலிய அணியும் இலங்கை அணியை தோற்கடித்தது. அதேநேரம் இந்திய அணியை நியூஸிலாந்து அணி தோற்கடித்தது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.