ஒரே நேரத்தில் படிப்பிலும் விளையாட்டிலும் சாதித்த ஈழத்து பெண் Uncategorized

ஒரே நேரத்தில் படிப்பிலும் விளையாட்டிலும் சாதித்த ஈழத்து பெண்

1 min read
💬 0

வைத்தியராகி நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே எனது இலக்கு என க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தியினை பெற்ற யூட்வசீகரன் டிவோன்சி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை கிராமத்தை சேர்ந்த குறித்த மாணவி ஒரே நேரத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் 9 ‘ஏ’ சித்திகளை பெற்றதோடு, தைக்வொண்டோ (Taekwondo) விளையாட்டிலும் பதக்கத்தினை பெற்று இரணைப்பாலை கிராமத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

படிப்பிற்கு விளையாட்டு சம நேரத்தில் கொடுக்கும் முக்கியத்துவத்தில் இரண்டிலும் சாதனை படைக்கலாம் எனவும், அதற்கு தான் ஒரு எடுத்துக்காட்டு எனவும் மாணவி கூறியுள்ளார்.

மேலும், தனது வெற்றிக்கு துணைநின்ற பயிற்றுவிப்பாளர், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார்.

அத்துடன், குறித்த மாணவி வைத்தியராக வருவதே தனது இலக்கு எனவும், அதனையும் அடைவேன் எனவும் அவர் கூறியிருந்தார்.

குறித்த மாணவியின் தந்தை இது தொடர்பாக கூறும்போது,

“விளையாட்டில் ஆர்வம் காட்டும் நேரம் படிப்பு பின்தங்கிவிடுமோ என பயமாகவே இருந்தது. ஆனால் ஒரே நேரத்தில் எனது மகள் விளையாட்டிலும் படிப்பிலும் சாதனை படைத்தது எமக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கின்றது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.