கல்வியமைச்சு வெளியிட்ட பாடசாலை மூன்றாம் தவணை தொடர்பான அறிவிப்புகள் Uncategorized

கல்வியமைச்சு வெளியிட்ட பாடசாலை மூன்றாம் தவணை தொடர்பான அறிவிப்புகள்

1 min read
💬 0

எதிர்வரும்17.01.2025 இல் முடிவடையவிருந்த 2024 ஆம் கல்வியாண்டிற்கான பாடசாலை 3ம் தவணை மேலும் ஒரு வாரத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் மூன்றாம் தவணை மற்றும் 2024 கல்வியாண்டு 24.01.2025 அன்று முடிவடையும்.
மூன்றாம் தவணைக்கான தேர்வு மற்றும் தேர்ச்சி அறிக்கைகளை மாணவர்களுக்கு வழங்குதல் தொடர்பில் அதிபர்கள் விடுத்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு பிற்போடப் பட்டதாக
அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தவணை முடிவடையும் 24ஆம் திகதிக்குள் மூன்றாம் தவணைப் பரீட்சையை நடத்தி தேர்ச்சி அறிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என கல்வி அமைச்சு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.